மதுரை: மதுரை கிரானைட் முறைகேடு வழக்குகளில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஆவணங்களை போலீசார் தயார் செய்து வருகின்றனர். கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கில், கிரானைட் உரிமையாளர், மீண்டும் கைது செய்யப்பட்டார். மேலூர், கீழையூர் பகுதிகளில், கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக, 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பி.ஆர். பழனிச்சாமி, ராஜசேகரன், பன்னீர் அகமது உட்பட, சில உரிமையாளர்களும், உதவிய, "டாமின்' அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்குகளில், விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக, வருவாய், பொதுப்பணித் துறை அதிகாரிகளின் உதவியை, போலீசார் நாடியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட உரிமையாளர்களின் சொத்துகளை, குற்றப் பத்திரிகையில் காண்பிப்பது குறித்து, பத்திரப்பதிவு அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகின்றனர்.
மீண்டும் கைது : மதுரை, இலங்கிப்பட்டியில் உள்ள, "குமார் கிரானைட்' நிறுவனமும், முறைகேட்டில் ஈடுபட்டதாக, உரிமையாளர் பெரிய கருப்பன், 70, கடந்த மாதம், கைது செய்யப்பட்டார். நான்கு நாட்களுக்கு முன், ஜாமினில் வெளி வந்த அவர், கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கில், நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.