புவனகிரி: வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பும் தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென முதல்வருக்கு மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு புவனகிரி ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் சதானந்தம் அனுப்பிய மனு: மேல்புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களுக்கு வீராணம் ஏரியிலிருந்து வடக்கு பூதங்குடி வாய்க்கால், பாசிமுத்தான் ஓடை, வெள்ளாறு ராஜன் வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால்களான வத்துராயன்தெத்து வாய்க்கால், முரட்டு வாய்க்கால், அரியகோஷ்டி வாய்க்கால், மானம் பாத்தான் வாய்க்கால்களின் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். வழக்கத்திற்கு மாறாக பொதுப்பணித்துறை நிர்வாகம் வீராணம் ஏரியிலிருந்து வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் வாய்க் கால்களின் வழியாக பாசன வசதி பெறும் விளை நிலங் களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் காய்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கின்றனர். இது குறித்து முதல்வர் தலையிட்டு புவனகிரி ஒன்றிய பகுதி விவசாய நிலங்களையும், பயிர் செய் துள்ள விவசாயிகளையும் பாதுகாக்க சென்னைக்கு அனுப்பும் தண்ணீரை தற்காலிகமாக தடுத்து நிறுத்தி இந்த பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும். வீராணம் ஏரி பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.