மேட்டுப்பாளையம்: தாயை பிரிந்து தவிக்கும் யானை குட்டியை, தாயுடன் சேர்க்கும் முயற்சியில், மேட்டுப்பாளையம் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையத்தை அடுத்த, சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட, காட்டுப் பகுதியில் இருந்து, நான்கு மாதமே ஆன, ஆண் யானைக் குட்டி ஒன்று, தாயை பிரிந்து, அருகில் இருந்த விளை நிலங்களில் சுற்றித் திரிந்தது. அப்பகுதி மக்கள், யானைக் குட்டியை மீட்டு, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அளித்தனர்; வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவை அடுத்து, சிறுமுகை வனச்சரகர், தினேஷ்குமார் தலைமையில் வனத் துறையினர், அடர்ந்த வனப் பகுதிக்குள், தாயுடன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.