தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக, சிவகாசியில் டைரிகள் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வடமாநிலங்களில் தயார் செய்யப்படும் டைரிகள், சந்தையில் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில், சிவகாசிக்கு அடுத்ததாக மும்பை, கோல்கட்டா, டில்லியை சேர்ந்த நிறுவனங்கள் தயாரிக்கும் டைரிகளே அதிக அளவில் விறபனை செய்யப்படுகின்றன. சிவகாசியில் லவ்லி, ஸ்கார்னேசன், மேஜஸ்டிக், வசந்தம் ஆகிய நிறுவனங்களும், டில்லியில், நாவல்டி, கிளாஸிக் ஆகியவையும், கோல்கட்டாவில் கிளாஸிக், ஹார்டுவேர்ஸ், நேஷனல், மும்பையில் நாவல்டி ஆகிய நிறுவனங்களே டைரிகள் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன. வடமாநிலங்களில் தயார் செய்யப்பட்டு, தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் டைரிகளுக்கு உற்பத்தி செலவும், போக்குவரத்து செலவுகளும் சேர்க்கப்படுவதால், சிவகாசியின் டைரிகளின் விலையை விட, வடமாநில டைரிகளின் விலை அதிகமாகவே இருக்கும்.
நடப்பாண்டில், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு டைரி தயாரிப்பு தொழிலிலும் பாதிப்பை ற்படுத்தி உள்ளது. தற்போது, 16 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதால், டைரி உற்பத்தியாளர்கள் ஜெனரேட்டர் உதவியுடன் டைரிகள் தயாரிக்கின்றனர். அதனால், ஜெனரேட்டரை இயக்க, டீசலுக்காக பெரும் தொகை செலவு செய்யப்படுகிறது. இருப்பினும், வியாபாரிகள் கொடுக்கும் ஆர்டர்களை, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியவில்லை. இதனால், பல நிறுவனங்கள் டைரிகளுக்கு ஆர்டர் எடுப்பதை குறைப்பு செய்துள்ளன. சிவகாசியில் டைரி தொழிலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தமிழக வியாபாரிகள், வடமாநில டைரி நிறுவனங்களில் அதிக அளவில் ஆர்டர் கொடுத்து, வரவழைத்து வருகின்றனர்.
வடமாநில நிறுவனங்களின் டைரிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளதால், டைரிகளின் விலையில், 20 முதல், 30 சதவீதம் வரை விலை உயர்வும் ஏற்பட்டிருக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.