களக்காடு:களக்காடு
அருகே யானைகள் கூட்டம் மீண்டும் மலையடிவார பகுதிகளுக்கு
வரத்துவங்கியுள்ளது.நேற்று ஊருக்குள் வந்த யானைகள் மின்வேலி தடுப்பை
தாண்டிசெல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதிஅடைந்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மின்வேலியில் வரும் மின்சாரத்தை
தடைசெய்து மின்வேலியை அப்புறப்படுத்தியபின் யானைகள் கூட்டம் மீண்டும்
காட்டுக்குள் சென்றன.களக்காடு சேரன்மகாதேவி ரோட்டில் உள்ள இசக்கியம்மன்
கோவில் மற்றும் புலவன்குடியிருப்பு, பூதத்தான்குடியிருப்பு போன்ற
பகுதிகளில் ஆண்டுதோறும் யானைகள் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில்
கூட்டமாக மலையடிவாரத்ததிற்கு வருவது வழக்கமாக உள்ளது. இந்த யானைகள் கூட்டம்
மலையடிவாரத்தில் இருந்து ஊருக்குள் புகுந்து அங்கு பயிர்செய்துள்ள
பயிர்களை நாசப்படுத்துவதுடன், பனை, தென்னை, முந்திரி போன்றவற்றையும்
நாசப்படுத்திவருகிறது.கடந்த ஆண்டு இப்பகுதியில் புகுந்த யானைகள் கூட்டம்
சுமார் 5மாதங்கள் முகாமிட்டது. கடந்த மார்ச் மாதம்தான் யானைகள் கூட்டம்
காட்டிற்குள் சென்றன. இந்நிலையில் மீண்டும் யானைகள் கூட்டம் களக்காடு
மலையடிவார பகுதிகளுக்கு துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 5 பெரிய
யானைகள் மற்றும் 2 குட்டி யானைகள் களக்காடு சேரன்மகாதேவி ரோட்டில் உள்ள
அரசன் நகர் பகுதிக்கு வந்துள்ளது. இந்த யானைகூட்டம் அங்கிருந்து பிரபு
என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. பின் ஊர் பகுதிக்குள்
புகுந்து ஜாலியாக சுற்றிவிட்டு நேற்று காலை மீண்டும் காட்டிற்குள்
செல்லமுற்பட்டது.ஏற்கனவே யானைகள் அட்டகாசத்தை தடுக்கும் வகையில் மலையடிவார
பகுதிகளில் இவ்வாண்டு சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானைகள்
கூட்டம் சோலார் மின்வேலியை தாண்டிதான் காட்டிற்குள் செல்லமுடியும்.
நேற்று
காலை யானை கூட்டம் சோலார் வேலியை தாண்ட முற்பட்டபோது மின்வேலியில் உள்ள
மின்சாரம் யானைகளை தாக்கியுள்ளது. இதனால் பயந்த யானைகள் அங்கும் இங்கும்
சத்தம் போட்டபடி ஓடியது. இதனால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிர்ச்சி
அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. களக்காடு
ரேஞ்சர் மணிமாறன், பாரஸ்டர் அப்துல்ரகுமான் மற்றும் வனத்துறையினர்
சம்பவஇடத்திற்கு சென்றனர்.யானைகள் சோலார் மின்வேலியை தாண்டி காட்டிற்குள்
செல்லமுடியாமல் தவிப்பதை கண்டனர். இந்நிலையில் பொதுமக்கள் கூடியதை
தொடர்ந்து அருகிலுள்ள முட்செடிகள் அடர்ந்த பகுதிக்கு சென்றது. உடனடியாக
வனத்துறையினர் சோலார் மின்வேலியில் செல்லும் மின்சாரத்தை தடைசெய்து யானைகள்
காட்டிற்குள் செல்வதற்கு வசதியாக மின்வேலி கம்பிகளை அகற்றினர். இதை
தொடர்ந்து யானைகள் மீண்டும் காட்டிற்குள் சென்றன. இச்சம்பவத்தால் சுமார்
5மணிநேரம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.