தஞ்சாவூர்: தமிழக முதல்வரின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்மூலம், தஞ்சை தனியார் மருத்துவமனையில் கடந்த ஒன்பது மாதத்தில், 1,100 கேன்ஸர் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.தஞ்சையில், ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன், தஞ்சை புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மைக்கேல் ஆகியோர் தலைமையில், ஏழை கேன்ஸர் நோயாளிகளுக்கு மருத்துவமனை மூலம் விரைவாக சேவையளிப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.இதில் இயக்குனர் டாக்டர் அருண் சேஷாச்சலம், அறக்கட்டளை செயலாளர் மருதுதுரை, பொருளாளர் அப்துல் ஹக்கீம், நிறுவன அறங்காவலர்கள் கூத்த பெருமாள், டாக்டர்கள் கவுசல்யா, இந்திரா, புற்றுநோய் மருத்துவமனை டாக்டர்கள் சுஜித், செந்தில்குமார், பாலாஜி, ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து, ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன், தஞ்சை புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மைக்கேல், இயக்குனர் டாக்டர் அருண் சேஷாச்சலம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:தஞ்சையில், ஜீவா அறக்கட்டளையின் ஒரு அங்கமாக தஞ்சை புற்றுநோய் மருத்துவமனை துவங்கப்பட்டது. இம்மருத்துவமனையில் இதுவரை, 2,300 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த, 2,300 பேர் பயனடைந்துள்ளனர், இதில், ஹீமோதெரபி, 1,217 பேருக்கும், கதிர்வீச்சு, 394 பேருக்கும், எண்டோஸ்கோப்பி, 12 பேருக்கும், ஆபரேஷன், 18 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், இதுவரை, ஒன்பது மாதங்களில், 1,100 கேன்சர் நோயாளிகள் பயனடைந்துள்ளனர். ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில், ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை கட்டணத்தில், 50 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மெடிக்கல் மூலம், 39 லட்சம் ரூபாயும், மீதமுள்ள, 11 லட்சம் ரூபாய் மருத்துவமனை, டாக்டர் மற்றும் ஆய்வக கட்டணமாகவும் பிரித்து தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.மேலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸை, முழுவதும் இலவசமாக நோயாளிகளை அழைத்து வரவும், அழைத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.