Dowry case filed against police | வரதட்சணை கொடுமை : போலீஸ்காரர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமை : போலீஸ்காரர் மீது வழக்கு

Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், வரதட்சணை கேட்டு, மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது, வழக்குப் பதிவு செ#யப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் மகன் சிக்கந்தர், 29. கீழ்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.
இவருக்கும், தியாகதுருவத்தைச் சேர்ந்த பஷீர் அகமது மகள் ரிஸ்வானா, 24, என்பவருக்கும், கடந்த, 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக, சிக்கந்தர் மது அருந்திவிட்டு வந்து, ரிஸ்வானாவை திட்டி தாக்கியுள்ளார். கடந்த, 2ம் தேதி, சிக்கந்தர் மற்றும் அவரது தந்தை ஷாஜகான், தாய் ஹர்புன்பீ ஆகியோர், தாயிடமிருந்து குழந்தையை பிரித்துள்ளனர். தாய் வீட்டிலிருந்து கூடுதலாக, 75 சவரன் நகைகள் வரதட்சணையாக வாங்கி வருமாறு கொலை மிரட்டல் விடுத்து, வீட்டிலிருந்து விரட்டியதாக ரிஸ்வானா கொடுத்த புகாரின் பேரில், சிக்கந்தர் உட்பட, மூன்று பேர் மீதும் கள்ளக்குறிச்சி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை