புதுக்கோட்டை: ""காவிரி பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தவேண்டும்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்த, மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:உட்கட்சி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடன் ஆலோசனைகள் பெறவும், அவர்களுடைய கருத்துகளை கேட்டறியவும் ஏதுவாக, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தமிழகம் முழுவதும் மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், புதுக்கோட்டையில் இன்று (நேற்று) கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. இப்பிரச்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, விவாதித்து முடிவெடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிடவேண்டும். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அனைவரும், கட்சி பாகுபாடின்றி பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை, தலைவர்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேறுவதை விரும்பவில்லை. இதுபோன்று தான் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா கட்சியிலிருந்து விலகியுள்ளதையும் விரும்பவில்லை. அவரது இந்த நடவடிக்கை துரதிஷ்டமானது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.