வேலாயுதம்பாளையம்: சத்யபிரியன் சபரி யாத்திரைக் குழு சார்பில், 25ம் ஆண்டு காவிரி தீர்த்த யாத்திரை விழா நடந்தது. வேலாயுதம்பாளையம் ஐயப்பன் ஸ்வாமிக்கு ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்தில் காவிரி தீர்த்தம் கொண்டு சிறப்பு வழிபாட்டு அபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தவிட்டுபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர், ஐயப்பன் ஆகிய உற்சவ ஸ்வாமிகளை காவிரியாற்றில் நீராட்டி, பாலாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் புடை சூழ தீர்த்த யாத்திரை கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கருப்பண்ண ஸ்வாமி அரிவாள் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பிறகு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குரு சுவாமிகள் வெங்கிடுசாமி, வீரப்பன், ராஜூ, ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.