திருநெல்வேலி:நெல்லை
ஜே.சி.ஐ.,யின் 18ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நெல்லை
ஜங்ஷனில் நடந்தது.விழாவிற்கு பிரின்ஸ் தலைமை வகித்தார். 2013ம் ஆண்டிற்கான
புதிய தலைவராக முருகேஷ், செயலராக சக்கரவர்த்தியும் பதவியேற்றனர்.
இதனையடுத்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.சிறப்பு
விருந்தினராக குமரி மாவட்ட பார் அசோசியேஷன் முன்னாள் தலைவரும், ரோட்டரி
மாவட்ட ஆளுநர் போட்டியாளர் அசோக் பத்மராஜன் பங்கேற்றனர்.ரோட்டேரியன் ஆறுமுக
பாண்டியன், மாதா டிம்பர் உரிமையாளர் ஜேசி., செனட்டர் ஜேசு மரிய ஆண்டனி,
மண்டல துணை தலைவர் ரங்கராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி
பேசினர்.
புதிதாக தலைவராக பொறுப்பேற்ற முருகேஷ் ஏற்புரையில், இனி வரும்
ஜே.சி.ஐ., கூட்டங்களுக்கு இலக்கிய பேச்சாளர்கள் தமிழருவிமணியன்,
ஞானசம்பந்தம், சாலமன் பாப்பையா போன்றோரை அழைத்து வரவுள்ளோம். ஜேசி.,யின்
முன்னோடி பயிற்சியாளர்களை அழைத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பெண்களுக்கு சிறந்த கைவினைத் தொழில் பயிற்சி அளிக்கப்படும்
என்றார்.விழாவில் ஜே.சி.ஐ., ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம் போன்வற்றின்
உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயலர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.