More searching for train theft | ரயில் கொள்ளையில் மேலும் 3 பேருக்கு வலை : தங்கம் பதுக்கிய தகவல் கிடைக்காததால் சிக்கல்| Dinamalar

ரயில் கொள்ளையில் மேலும் 3 பேருக்கு வலை : தங்கம் பதுக்கிய தகவல் கிடைக்காததால் சிக்கல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: ஈரோடு அருகே, ஓடும் ரயிலில் நடந்த, 13 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில், மேலும் மூவரை, போலீசார் தேடி வருகின்றனர். வெளிமாநில போலீசார் ஒத்துழைப்பு இன்றி, தங்கம் மீட்பதில், சிக்கல் நிலவுகிறது.
ராஜஸ்தானை சேர்ந்த வினோத்குமார், 45, சென்னை சவுகார்பேட்டையில், "தனலட்சுமி ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில், தங்கநகை கடை வைத்துள்ளார். இவரிடம், ராஜஸ்தானை சேர்ந்த வரதராம், 45, மதன்சிங், 37, ஜிஜேந்தர் சிங், 30, ஆகியோர், தங்கநகை வாங்கி விற்கும், "கேரியராக' பணிபுரிகின்றனர். கடந்த, செப்., 23ம் தேதி, திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த, வரதராம் உட்பட மூவர், 13 கிலோ தங்கத்தை, இரண்டு சூட்கேஸ்களில் வைத்து பயணித்தனர். ஈரோட்டை கடந்து ரயில் சென்ற போது, சூட்கேஸ்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. ஈரோடு ரயில்வே போலீசார், ஏழு தனிப்படை அமைத்து, விசாரித்தனர். கொள்ளை போன தங்கம், பல கோடி ரூபாய் மதிப்பு என்பதால், ஐ.ஜி., ஆறுமுகம், எஸ்.பி., கயல்விழி ஆகியோர், தனி கவனம் செலுத்தி விசாரித்தனர். நீண்ட விசாரணைக்கு பின், இச்சம்பவத்தில் தொடர்புடைய, மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, கொள்ளை கும்பல் தலைவன், சுனில் யஷ்வந்த் ஜாதவ் உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 208 கிராம் தங்க நகை மற்றும் மூன்று கார்கள் மட்டுமே, போலீசார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய, சுனில் தந்தை யஷ்வந்த்தை, நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர்.

ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இந்த வழக்கில் துப்பு துலக்க, வெளி மாநிலங்களுக்கு, யார் யார் மொபைல் போனில் பேசினர் என்று கண்காணித்தோம்; வெளி மாநில கார்கள், "செக் போஸ்ட்' கடந்து சென்றது குறித்தும் விசாரித்தோம். அதில் கிடைத்த தகவல் படி, இவர்களை பிடித்துள்ளோம். சத்தியமங்கலம் வழியாக இவர்கள், கர்நாடகா சென்று, அங்கிருந்து மகாராஷ்டிரா சென்றுள்ளனர். அங்கு, உள்ளூர் போலீசார் ஒத்துழைப்பு, எங்களுக்கு கிடைக்கவில்லை. சிறிது பிரச்னை என்றாலும், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. பிடிபட்டவர்கள் யாரும், வாய் திறக்கவில்லை. இக்கும்பலை சேர்ந்த மூவர், இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை பிடித்தால் மட்டுமே, கொள்ளையடித்த தங்கத்தை எங்கு பதுக்கியுள்ளனர் அல்லது விற்று விட்டனரா என்பது தெரியவரும். மகராஷ்டிராவை சேர்ந்த உள்ளூர் போலீசார், கொள்ளையர்களுக்கு ஆதரவாக பேசுவதால், கொள்ளை போன தங்கத்தை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. மொழிப் பிரச்னையும் இருப்பதால், பிடிபட்டவர்களிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balagiri - Chennai,இந்தியா
05-டிச-201223:34:10 IST Report Abuse
balagiri இது ஒன்னும் கிடைக்காது, எப்போ புகர் கொடுத்த உடனே இது எங்க எல்லையில் இல்லை, அங்க போ, இங்க போ என்று இழுத்தடிதபின் என்ன கிடைக்கும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.