பண்ருட்டி :பண்ருட்டி அருகே பணியின் போது, தனியார் ஆம்னி பஸ் டிரைவர் நெஞ்சுவலியால் இறந்தார். சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு, தனியார் ஆம்னி பஸ் பண்ருட்டி வழியாக நேற்று அதிகாலை, 4:15 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. தஞ்சாவூர் அடுத்த பாபநாசத்தைச் சேர்ந்த ரஞ்சித், 38, என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பண்ருட்டி அடுத்த மாம்பட்டு அருகே வந்தபோது, டிரைவர் ரஞ்சித்துக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சமார்த்தியமாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி, "ஸ்டியரிங்' மீது சாய்ந்தார். அதிர்ச்சியடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள், "108' அவசர ஆம்புலன்ஸ் மூலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், ரஞ்சித் இறந்து விட்டதாக, தெரிவித்தனர். உயிர் போகும் நிலையிலும், பஸ்சை சாலையோரம் நிறுத்தி, தங்களைக் காப்பாற்றிய பஸ் டிரைவரைப் பார்த்து, பயணிகள் கண் கலங்கினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தான் Aற்றி வந்த பயணிகள் பாதுகாப்பாக வண்டியை நிறுத்திவிட்டு தனது பணியில் நேர்மைyiனை நீலை நாட்டி தந்த உயிரை நீத்த அவருக்கு நான் தலை வணங்குகிறேன் . பயணம் செய்தவர்கள் மனித நேயத்துடன் அவரது குடும்பத்தினருக்கு தமக்கு நேர இருந்த விபத்தை தவீர்தமைக்கு அவர்கள் செய்யும் சிறு உதவியே அவரது குடும்பத்திற்கும் அவருக்கும அவர்கள் செய்யும் நன்றிகடனகுகும். தயவு செய்து எனனக்கு அவரது முகவரியை தயவு செய்து ஈ-மெயில் மூலம் அனுப்பவும். ச ர வித்யா சாகர் ராவ், கோயம்புத்தூர் தொலைபேசி 9791898760
அரசு வேலை உடனே தர வேண்டும். பயணிகள் சிறப்பு நிதி தர வேண்டும். போக்குவரத்து துறை
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இதற்கான முயற்சிகளை முதல்வரின் உத்திரவுப்படி உடனே
07 . 12 . 2012 அன்றே செய்ய வேண்டும். தொழிற் சங்கங்கள் நிதி தர வேண்டும். ரஞ்சித் குடும்பம்
கோடீஸ்வர குடும்பம் ஆக வேண்டும். இதையெல்லாம் செய்தாலும் அவருக்கு இணையாக
செய்ததாக ஆகாது.
சிறந்த மாமனிதர் ரஞ்சித். இறந்து விட்டாரே... கடவுளே... அவ்வளவு அன்பா உனக்கு அவர் மேல்..... அன்னாருக்கு சிறந்த மனிதர் என்கிற சிறப்பு அந்தஸ்து கொடுத்து அவர் குடும்பத்திற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் (இலவச பஸ் வசதி, ரயில் வசதி என்பது போல) என்பது எனது கோரிக்கை. அவரது நிர்வாகமும் அவரது குடும்பத்திற்கு கட்டாயம் நல்ல உதவிகளை செய்ய வேண்டும்... இவர் மாதிரி மாமனிதர்களால் இன்னமும் மானுடம் வெல்கிறது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.