நெல்லிக்குப்பம்: தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், கட்டண வேறுபாட்டால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், சாதாரண, சொகுசு, விரைவு என, பல்வேறு பெயர்களில் இயங்குகிறது; அதற்கு தகுந்தபடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னையைத் தவிர பிற இடங்களில், பஸ்களில் இது போன்ற வேறுபாடு இல்லை. விழுப்புரம் கோட்டத்தில், கடலூரில் இருந்து விழுப்புரத்துக்கு, மாளிகைமேடு வழியாக, பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது, ஒரு பஸ்சில் நெல்லிக்குப்பத்தில் இருந்து, விழுப்புரத்திற்கு, 15 ரூபா# கட்டணமும், வேறு சில பஸ்களில், 20ம், வசூல் செ#யப்படுகிறது. கும்பகோணம் கோட்ட பஸ்களில், இதே ஊருக்கு, 21 ரூபா# கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், அரசு பஸ்களை விட, விரைவாக இயங்கும் தனியார் பஸ்கள் அனைத்திலும், 15 ரூபா# மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களில், மாறுபட்ட கட்டணம் வசூலிப்பது, பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணத்தில் வேறுபாடு இல்லாமல், ஒரே மாதிரியான கட்டணத்தை, அரசு பஸ்களில் வசூலிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.