காரைக்குடி: பணிநீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர், கல்லூரி முதல்வர் அறை முன், குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில், நேற்று முன்தினம், 22 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், 2009 முதல் பணியாற்றிய மாற்றுத்திறனாளி முருகானந்தம், 30, பணிநீக்கம் செய்யப்பட்டதால், இவர் குடும்பத்துடன், கல்லூரி முதல்வர் அறை முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக, பி.பி.ஏ., மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
முதல்வர் குமாரசாமி கூறிகையில், ""அரசு விதிகளின்படி, பிஎச்.டி., ஸ்லெட், நெட் முடித்தவர்களை எடுக்க வேண்டும்.பிஎச்.டி., இல்லாத பட்சத்தில், எம்.பில்., முடித்தவர்களை எடுக்கலாம். தகுதியின் அடிப்படையில், புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.