ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கோவை பக்தரிடம், 20 ஆயிரம் ரூபாயை பறித்து, கத்தியை காட்டி மிரட்டிய, மதுரை ரவுடிகளில் ஒருவன் சிக்கினான். கோவையை சேர்ந்த கண்ணன், மனைவி வெண்மதி, அக்னி தீர்த்த கடல் பகுதியில் நின்றிருந்தனர். இவர்களிடம், 20 ஆயிரம் ரூபாய், இரு மொபைல்போன்களை, மூவர் பறித்து கொண்டு ஓடினர். பக்தர்கள் சத்தமிட்டும், போலீசார் கண்டு கொள்ளவில்லை. யாத்திரை பணியாளர் சங்க செயலர், சக்திவேல் மற்றும் சிலர் தடுத்தபோது, கத்தியை காட்டிய திருடர்கள், "திருப்புவனம், எஸ்.ஐ., ஆல்வின் சுதனை, கொலை செய்தவர்கள்... தொட்டால் கொலை செய்ய தயங்க மாட்டோம்...' என, மிரட்டி தப்பி ஓடினர்.
இதில் ஒருவனை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ், "கவனித்து' விசாரித்தில், மூவரும், மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் என தெரியவந்தது. கண்ணனின் புகாரை வாங்க, கோயில் போலீசார் மறுத்தனர்.
ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மணிவண்ணன் கூறுகையில், ""கண்ணன் புகார் கொடுக்கவில்லை. விசாரணைக்கு பின், யாத்திரை பணியாளர் சங்கத்தினரிடம் புகார் பெற்று, வழக்குப் பதிவோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.