கரூர்: "கரூர் லோக்சபா தொகுதி ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம், நடக்கிறது' என, கரூர் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:கரூர் ஒன்றியத்தில், இன்று (5ம் தேதி) காலை, 10 மணிக்கு தளவாபாளையம் மலையம்மன் திருமண மண்டபத்திலும், தாந்தோணி ஒன்றியத்தில் மதியம், 11 மணிக்கு வெள்ளியணை நவலடியான் ரைஸ் மில் அருகிலும், கடவூர் ஒன்றியத்தில், நாளை (6ம் தேதி) காலை, 10 மணிக்கு தரகம்பட்டி மாதா திருமண மண்டபத்திலும், 7ம் தேதி காலை, 10 மணிக்கு, கரூர் நகரம் சார்பில், கரூர் கலைஞர் அறிவாலயத்திலும், 8ம் தேதி கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் காலை, 10 மணிக்கு, மாயனூர் ரகுபதி திருமண மண்டபத்திலும், 9ம் தேதி காலை, 9 மணிக்கு, இனாம் கரூர் சார்பில், வெங்கமேடு எஸ்.எம்.கே., முத்து திருமண மண்டபத்திலும், தாந்தோணி நகரம் சார்பில் மாலை, 5 மணிக்கு தாந்தோணிமலை நாயுடு மஹாலிலும் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.கரூர் எம்.பி., தொகுதி ஒன்றிய, நகர நிர்வாகிகள், அந்தந்த நகரங்கள் வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடப்பதால், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தவறாது பங்கேற்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.