திருப்பூர்: திருப்பூரில், உரிமம் பெறாமல் ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட பனியன்களை, இந்திய தரக்கட்டுப்பாடு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
திருப்பூர், ராமையா காலனியில், கோபால்ராஜ் என்பவருக்கு சொந்தமான, "ஓரோ டெக்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம், தரச்சான்று உரிமம் பெறாமல், பனியன் ஆடைகளில் ஐ.எஸ்.ஐ., முத்திரை பதித்து விற்பதாக, கோவையில் உள்ள தரச்சான்று அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு புகார் சென்றது.
தரச்சான்று அமலாக்கப்பிரிவு தலைமை இயக்குனர் சதாசிவம் உத்தரவுப்படி, நேற்று, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இயக்குனர்கள் ரவிச்சந்திரன், பாஸ்கர் தலைமையிலான குழுவினர், திருப்பூரில் உள்ள அந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிமம் பெறாமல், ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் பனியன் ஆடைகள் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
தரக்கட்டுப்பாடு அமலாக்கப்பிரிவு இயக்குனர் ரவிச்சந்திரனிடம் கூறியதாவது: சம்பந்தப்பட்ட நிறுவனத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டதில், உரிமம் இல்லாமல், ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் உள்ளாடை தயாரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, "ஓரோ' மற்றும் "ஓரோ கூல் டெக்ஸ்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 1.26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தலா ஒரு பெட்டிக்கு, 12 பனியன்கள் அடங்கிய, 350 பெட்டி பனியன், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தரக்கட்டுப்பாடு சட்டம் 1986ன் படி, மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். உரிமையாளருக்கு, ஓராண்டு சிறை அல்லது 50 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.