திருமங்கலம்: திருமங்கலம் அருகே காதலியை கொன்று எரித்த காதலன் கவுதம் கைது செய்யப்பட்டார். திருமங்கலம் உரப்பனூருக்கு செல்லும் காட்டுப்பாதையில், டிச.,2 ல் கொலை செய்யப்பட்ட பெண் உடல் எரிக்கப்பட்டு கிடந்தது. போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், திரளியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகள் மாரியம்மாள் என தெரியவந்தது. அவரை கொலை செய்த காதலன் மேல உரப்பனூர் கவுதம், ஆர்.ஐ.,ராஜேந்திரனிடம் சரணடைந்தார்.
அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது: மாரியம்மாளும், நானும் காதலித்தோ ம். திருமணம் செய்ய வற்புறுத்தினார். டிச., 1ல் திருமணம் குறித்து முடிவு எடுக்கலாம் எனக் கூறி மாரியம்மாளை வரவழைத்தேன். இருவரும் பேசியபோது, மாரியம்மாள் திருமணமாகி கணவரை பிரிந்தவர் என தெரிய வந்தது. மாரியம்மாளின் சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன், என தெரிவித்துள்ளார்.
கவுதமை, ஆர்.ஐ., ராஜேந்திரன், திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.