விழுப்புரம்: விழுப்புரம் குழந்தைகள் நல மையத்தில் இருந்து காணாமல் போன மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை அழகர் பெருமாள் கோவில் தெருவில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் குழந்தைகள் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்த மையத்தில் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், 16, என்பவரை போலீசார் கொண்டு சேர்த்தனர். இந்நிலையில் சிவக்குமாரை மதுரை குழந்தைகள் நல குழு மைய ஆலோசகர் சசிகுமார் என்பவர், நேற்று முன் தினம் இரவு வேலூரிலுள்ள குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைக்க, அரசு பஸ் மூலம் அழைத்து சென்றார். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பஸ் நின்ற போது, சிவக்குமார் திடீரென கீழே இறங்கி தப்பியோடி உள்ளார். இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.