திருவாரூர்: ஊராட்சியில் நிதியில், 11.87 லட்சம் ரூபாய், முறைகேடு செய்த ஊராட்சி தலைவர் மீது, எஸ்.பி., யிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது; அவருக்கு துணையாக செயல்பட்ட ஊராட்சி செயலர், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம், மேல்விடையல் ஊராட்சி தலைவராக, பாஸ்கர் உள்ளார். ஊராட்சி வரவு, செலவு கணக்குகளை வலங்கைமான் திட்ட அலுவலர், தில்லை நடராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், விசுவநாதன் உள்ளிட்ட குழுவினர், ஆய்வு செய்தனர்.
இதில், 2011 நவ., 11ம் தேதி முதல், 2012 நவ., 24ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்தும் கணக்கு எண். 2ல் இருந்து, 7.33 லட்ச ரூபாயும், கணக்கு எண், 1ல் இருந்து, 4.54 லட்ச ரூபா# என, 11.87 லட்ச ரூபாயை, எந்த ஆவணங்களும் இல்லாமல் முறைகேடு செய்தது தெரிந்தது. இது குறித்து தஞ்சை கலெக்டருக்கு, அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். கலெக்டர் உத்தரவை அடுத்து, ஊராட்சித் தலைவர் பாஸ்கர் மீது, வலங்கைமான் திட்ட ஆணையர் தில்லை நடராஜன், எஸ்.பி., யிடம் புகார் கொடுத்தார். முறைகேடுகளுக்கு துணையாக இருந்த ஊராட்சி செயலர், கோபிநாத்தை பணியில் இருந்து, டிஸ்மிஸ் செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.