பண்ருட்டி: "தானே' புயல் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு செய்தது தொடர்பாக கிராம உதவியாளர் ஒருவர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சீராங்குப்பத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 46; சீராங்குப்பம் கிராம உதவியாளர். இவர், "தானே' புயல் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதில் முறைகேடு செ#ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், புகார் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவின் பேரில், பண்ருட்டி தாசில்தார் பத்மாவதி, சீராங்குப்பம் கிராம உதவியாளர் மாயகிருஷ்ணனை, தற்காலிக பணி நீக்கம் செய்து, நேற்று உத்தரவிட்டார்.