புதுடில்லி: பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முக்கிய குற்றவாளியான அப்சல் குரு கருணை மனு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என உள்துறை அமைச்சர் கூறினார்.மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் (24) கடந்த மாதம் 21-ம் தேதி தூக்கிலிடப்பட்டான். இந்நிலையில் பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்சல்குருவி்ற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில், அப்சல்குருவின் கருணை மனு பரிசீலனையில் உள்ளது. இதன் மீது நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றப்பின் முன்னர் நிலுவையில் இருந்த கருணை மனுவில் கசாப் மனு தான் நிராகரிக்கப்பட்டது. இதில் அப்சல்குருவின் மனு பரிசீலனையில் உள்ளது. இதன் மீது இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.