விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள பொன்முடியின் மகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், செம்மண் குவாரி அமைத்து, 28 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட ஏழு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கில், பொன்முடி உள்ளிட்ட நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கவுதமசிகாமணி, அவரது உறவினர் ராஜமகேந்திரன், குவாரி மேலாளர் சதானந்தன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கவுதமசிகாமணி உள்ளிட்ட மூன்று பேருக்கும், ஜாமின் வழங்க கோரி நான்காவது முறையாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
மனுவின் மீதான விசாரணை நேற்று மாலை நடந்தது. கவுதமசிகாமணி உள்ளிட்ட மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். இதன்படி, கவுதமசிகாமணி வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும், ராஜமகேந்திரன் சங்கரன்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும், சதானந்தன் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும், தினசரி காலை 10:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும், நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென, நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான உத்தரவை நேற்று இரவு, 7.30 மணிக்கு, சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இதனையொட்டி இரவு, 7:45 மணிக்கு, கவுதமசிகாமணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.