சென்னை: "ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட முயற்சித்த பெண்ணை, கொலை செய்ய, நானும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தும் முயற்சித்ததாக கூறப்படும் புகார் பொய்யானது' என, சென்னை ஐகோர்ட்டில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ரிஷிவந்தியம் தொகுதியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட, ஜெயந்தி என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. விஜயகாந்த் வெற்றி பெற்றதை எதிர்த்து, ஐகோர்ட்டில், தேர்தல் வழக்கை, ஜெயந்தி தாக்கல் செய்தார். இம்மனு, விசாரணையில் உள்ளது. தனக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி, ஐகோர்ட்டில், ஜெயந்தி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, என்.பால்வசந்தகுமார், போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். ஜெயந்தியின் மனுவுக்கு, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பார்த்தசாரதி சார்பில், வழக்கறிஞர் நமோ நாராயணன் தாக்கல் செய்த பதில் மனு: பள்ளியில் படிக்கும், ஜெயந்தியின் மகனை, விஜயகாந்த் மற்றும் அவரது கட்சியினரின் தூண்டுதலின் பேரில், தாக்குவதற்கு முயற்சித்ததாக கூறுவதில், உண்மையில்லை. ஜெயந்தியை கொலை செய்ய நானும், விஜயகாந்தும், முயற்சித்ததாக கூறுவதும் பொய்யானது. அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, அவர் சுமத்துகிறார். முன்னாள், எம்.எல்.ஏ., தற்போதைய எம்.பி., பற்றியும், பொய்யான புகார்களை இவர் கூறினார். முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக, பொய்யான புகார்களை கூறுவது, இவருக்கு வழக்கமானது. சென்னை போலீஸ் கமிஷனரிடம், ஜெயந்திக்கு எதிராக, நான் புகார் கொடுத்திருந்தேன். பழிவாங்கும் விதத்தில், எனது பெயரை, மனுவில் சேர்த்துள்ளார். இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.