வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில், நேற்று முன் தினம் மதியம் முதல், மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார். மாவட்டத்தில், அதிகபட்சமாக அரக்கோணத்தில், 66, ஆற்காடு, 41, சோளிங்கர், 37, காவேரிப்பாக்கம், 26, வாலாஜாபேட்டை, ஆம்பூரில் தலா, 25, வேலூர், ஆலங்காயத்தில் தலா, 21, திருப்பத்தூர், 17, ஆலத்தூர், 11 மில்லி மீட்டர் மழை பெய்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.