தர்மபுரி : கர்நாடகாவில், காவிரிகரையில் உள்ள தமிழக மக்கள் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ.,நஞ்சப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகா மாநிலத்தில், காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆலம்பாடி, புதுக்காடு, மாருகொட்டாய், ஜம்போடு, அப்புகாம்பட்டி, கோபிநத்தம், சங்கப்பாடி, போன்ற ஊர்களில் வாழ்ந்து வரும் அவர்களை வெளியேற்ற, கர்நாடகா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.கர்நாடக எல்லைப்பகுதியில் வாழும் தமிழ் மக்களை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா அரசுடனும், மத்திய அரசுடனும் உடனடியாக, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.