சென்னை: சோதனையின் போது, கூடுதலாக பணம் வைத்திருந்தார் என்பதற்காக, பயணச்சீட்டு ஆய்வாளருக்கு, கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை, சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம், ரத்து செய்தது.
தெற்கு ரயில்வேயில், சென்னை கோட்டத்தில், துணை தலைமை டிக்கெட் ஆய்வாளராக, கோபால் ராமன் என்பவர் பணியாற்றினார். கோவையில் இருந்து ஈரோடு செல்லும் ரயிலில், மூன்று "கோச்'களுக்கு, இவர் பொறுப்பாக இருந்தார். 17 டிக்கெட்டுகளை வழங்கியுள்ளார். இவர் செலுத்த வேண்டிய தொகை, 6,111 ரூபாய்; ஆனால், கூடுதலாக, 387 ரூபாய் வைத்திருந்தார். சோதனையின் போது, கூடுதல் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை நடந்தது. முதலில், பணியில் இருந்து, கோபால் ராமன் நீக்கப்பட்டார். பின்னர், கட்டாய ஓய்வு அளித்து, தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, சென்னையில் உள்ள, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கோபால் ராமன், மனுத் தாக்கல் செய்தார். மனுவை, தீர்ப்பாய உறுப்பினர்கள் சாந்தப்பா, சதாபதி, விசாரித்தனர். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ரவி ஆஜரானார்.
தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு: ரயில், ஈரோடு நகரை அடையும் முன், 90 நிமிடங்களில், மூன்று பெட்டிகளிலும் உள்ள, 254 பயணிகளை, பரிசோதிக்க வேண்டியதிருந்தது என்றும், பணி அழுத்தம் இருந்தது என்றும், மனுதாரர் கூறியதை, அதிகாரி ஏற்கவில்லை. சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்ததாக, மனுதாரர் மீது எந்த புகாரும் இல்லை. கூடுதலாக பணம் வைத்திருந்தார் என்பது தான் புகார். இதற்காக, பணி நீக்கம் என்பது, அவர் மீதான குற்றச்சாட்டின் அளவை விட அதிகம். கட்டாய ஓய்வு அளித்ததையும், ஏற்க முடியாது. எனவே, ரயில்வே அதிகாரிகளின் இந்த உத்தரவுகளில் குறுக்கிடுகிறோம். இந்த உத்தரவுகள், ரத்து செய்யப்படுகிறது.
எனவே, பணி நீக்கம், கட்டாய ஓய்வு போன்ற தண்டனையை விதிக்காமல், வேறு வகையில் தண்டனை விதிப்பதற்காக, இந்தப் பிரச்னையை, புதிதாக பரிசீலிக்க வேண்டும். பணி நீக்க தேதியில் இருந்து, மீண்டும் நியமிக்கும் வரை, மனுதாரருக்கு சம்பளம் கிடையாது; ஆனால், பென்ஷன் கணக்கிடுவதற்காக, அந்த பணி நாட்களை, கணக்கிட வேண்டும். இவ்வாறு, தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.