E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மாவட்டத்தில் 733 பள்ளிகளில் கழிவறைகள் இந்தாண்டு கட்டப்படும் : கலெக்டர் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2012
00:30

விழுப்புரம்: மாவட்டத்தில் இந்தாண்டு 350 அங்கன்வாடி கழிப்பறைகள் கட்டுவதற்கும், அரசு பள்ளிகளில் 733 கழிப்பறைகள் கட்டப்படுமென கலெக்டர் சம்பத் தெரிவித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகைமையின் கீழ் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார கழிப்பறை வளாகங்களை பராமரித்தல் குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். மகளிர் நல மேம்பாட்டு திட்ட அலு வலர் ராஜா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வரதராஜபெருமாள் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் நையினா நாயுடு, ஒன்றியக்குழு தலைவர்கள் சர்மிளா நெடுஞ்செழியன், பச்சையம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் சம்பத் பேசியதாவது : கிராமப்புறங்களில் சுகாதார முக்கியத்துவம் கருதியும், பொது இடங்களிலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பல இன்னல்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 1094 ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார கழிப்பறை வளாகங்கள் 19 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகங்கள் அனைத்தும் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 22 ஒன்றியங்களில் செயல்படுத்தப்படுகிறது. 152 ஊராட்சிகளில் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தில் தனிநபர் கழிவறைகள் கட்டுவது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இத்திட்டத்தின் கீழ் 152 ஊராட்சிகளை முதற்கட்டமாக தேர்வு செய்து, அங்கு தனிநபர் கழிப்பறைகள் 66,705 எண்ணிக்கையில் கட்டப்படுகிறது.

இதில் கட்டப்படும் ஒவ்வொரு தனிநபர் கழிப்பறைகளுக்கும் அரசு மானியமாக 5 ஆயிரத்து 700 ரூபாயும், பயனாளிகள் பங்கு தொகையாக 900 ரூபாயும் செலுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 500 ரூபாயும், 26 நபர்கள் சேர்ந்து 11 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பில் தனிநபர் கழிப்பறை கட்டவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 350 அங்கன்வாடி கழிப்பறைகள் கட்டுவதற்கும், ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உயர்நிலை பள்ளிகளில் 733 கழிப்பறைகள் கட்டுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.