திருக்கோவிலூர்: முகையூர் ஒன்றியம் வடகரைத்தாழனூர் கிராமத்தில் திருந்திய கரும்பு சாகுபடி குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
வடகரைத்தாழனூர் கிராமத்தில் ஆத்மா திட்டத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளிக்கப் பட்டது. ஒன்றிய சேர்மன் துளசிராஜா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக் குமார் கலந்து கொண்டு, செயல் விளக்கமளித்து விவ சாயிகளிடம் கூறியதாவது :
முகையூர் ஒன்றியத்தில் கரும்பு சாகுபடி பரப்பு 20 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது. எனினும் உற்பத்தி திறன் ஏக்கருக்கு 40 முதல் 50 டன் என்ற அளவில்தான் உள்ளது.
பழமையான முறையில் வாய்க்கால் பாசனம் மூலம் பயிரிடப்படுவதே இதற்கு காரணம். கரும்பு நாற்றங்கால் நடவு, சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் மற்றும் உர நிர்வாகம் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய நீடித்த நிலையான திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு 100 மெட்ரிக் டன் மகசூல் பெற முடியும். இம்முறையில் இடைவெளி அதிகம் இருப்பதால் ஊடுபயிராக உளுந்து, மணிலா, தர்பூசணி, காய்கறிகள் உள்ளிட்டவற்றை பயிரிட்டு, கூடுதல் வருவாய் பெறலாம்.
இவ்வாறு கென்னடி ஜெபக்குமார் கூறினார்.
ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார், துணை வேளாண்மை அலுவலர் புகழேந்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவநேசன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.