திண்டிவனம்: செங்கல்பட்டு பகுதியில் நடந்த, கொலை வழக்கில் தொடர்புடைய, கார் டிரைவர், திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்தவர், குப்புசாமி மகன் குணசேகரன், 32; கார் டிரைவர். கடந்த, 20 ம் தேதி, தே.மு.தி.க., மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், 35, கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். கொலை குற்றவாளிகள் குணசேகரனின் காரை, வாடகைக்கு எடுத்து சென்றதாக, போலீசாருக்கு தெரிய வந்தது. கார் டிரைவர் குணசேகரனை, போலீசார் தேடி வந்தனர்.
இதனையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு, திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், குணசேகரன் சரண் அடைந்தார். அவரை, வரும், 10 ம் தேதி, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு, மாஜிஸ்திரேட் சந்தோஷ் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.