ஓசூர்; ஓசூர் அருகே, கெலமங்கலத்தில், பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த, ஐந்து பேரை போலீஸார் தேடுகின்றனர்.கெலமங்கலம் அடுத்த முகளூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கிருஷ்ணம்மா, 30. ஐந்தாண்டுகளுக்கு முன், திண்டுக்கல் "சக்சஸ்' நெட்வொர்க் மார்க்கட்டிங் கம்பெனியை சேர்ந்த சிலர், இவரது வீட்டிற்கு வந்து, 4,000 ரூபாய் கொடுத்தால், மூன்று ஆண்டில், 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும், என கூறியுள்ளனர்.இதை நம்பி, கிருஷ்ணம்மா உள்பட அப்பகுதியை சேர்ந்த, 50 பெண்கள், அவர்களிடம், 4,000 ரூபாய் கொடுத்து உறுப்பினராக சேர்ந்துள்ளனர். மூன்று ஆண்டுகளான பின், முதிர்வு தொகை, 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்."சக்சஸ்' நெட்வொர் மார்க்கெட்டிங் கம்பெனியினர், 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. முதலீடு செய்த, 4,000 ரூபாயையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதிர்ச்சியடைந்த கிருஷ்ணம்மா உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்கள், பலமுறை அந்த கம்பெனி ஊழியர்களிடம் பணம் கேட்டுள்ளனர். அவர்கள், இரு ஆண்டாக பணத்தை வழங்காமல் இழுத்தடித்தனர். ஒருகட்டத்தில், மொபைல் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டனர். இதனால், கிருஷ்ணம்மா, கெலமங்கலம் போலீஸில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி, வழக்கு பதிவு செய்து, பாகலூர் அடுத்த பெலத்தூர் ராஜீவ் நகர் சுப்பிரமணி, உப்பாரப்பள்ளி வெங்கட்ராஜ், முகளூர் முனிரெட்டி, ஜக்கேரி அப்பையா, ஜோலார்பேட்டை அன்புதமிழன் ஆகியோரை தேடி வருகிறார்.இவர்கள், கெலமங்கலம் மட்டுமில்லாது, பாகலூர், பேரிகை, உப்பாரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலரை ஏமாற்றியிருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.