தண்ணீர் இல்லாமல் விவசாயிகளுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஸ்ரீவைகுண்டம்:தாமிரபரணி பாசனத்தில் 2012ம் ஆண்டு கார், முன்கார், பிசானம் என்ற முப்போக சாகுபடிகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஒரு போகத்திற்கு கூட தண்ணீர் தராமல் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் என ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் விவசாயத்தை புறக்கணித்து நிலத்தடி நீரை கூட விட்டு வைக்காமல் தண்ணீரை உறிஞ்சி எடுத்து தொழிற்சாலைகளுக்கு கொடுத்ததி னால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு சுமார் 100கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீவைகுண்டத் தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.தூத்துக்குடி மாவட்ட விவசாயத்தையும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் பாதிக்கும் மருதூர் 4வது பைப்லைன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளின் குடி தண்ணீர்தேவைக்காக கோரம்பள்ளம் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், தொழிற்சாலைகள் 20எம்ஜிடி திட்டத்தில் ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதையும் நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதையும் நிறுத்தி கடல் நீரை நண்ணீராக்கி பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாய பிரதிநிதிகளின் கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது. தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமை வகித்து பேசியதாவது; பாபநாசம், மணிமுத்தாறு, மருதூர், ஸ்ரீவை., ஆகிய அணைகள் விவசாயத்திற் காகவே கட்டப்பட்டதாகும். இவ் வணைகளின் சாகுபடி சிஷ்டத்தில் குடிதண்ணீருக்கு முதல் உரிமை என்று எந்த இடத்திலும் சொல் லப்படவில்லை.

இந்நி லையில் தாமிரபரணி தண்ணீர் குடி தண்ணிருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளின் குடி தண்ணீர் தேவைக்காக 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4வது பைப் லைன் திட்டத்தில் மருதூர் அணையிலிருந்து நேரடியாக நாள் ஒன்றுக்கு 9 கோடியே 70 லட்சம் தண்ணீர் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறுகின்றது. ஆனால் 20 எம்ஜிடி திட்டத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை என்ற விதிமுறைகளை மீறி ஸ்ரீவை., அணையிலிருந்து தொழிற்சாலை களுக்கு தண்ணீர் எடுப்பதினால் விவசாயம் பாதிக்கப் படுவதாக விவசாயிகள் தொடர்ந்து போராடிய போது மௌனம் சாதித்த மாவட்ட நிர்வாகம் தற்போது குடிதண்ணீரு க்கு முன்னுரிமை என கூறுவது விவசாயிகளை ஏமாற்றும் செய லாகும். பொதுப்பணித்துறையி னர் மருதூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க தடையில்லா சான்று தர மறுத்துள்ள நிலையில் குடி தண் ணீர் தேவைக்காக 118 ரூபாய் கோ டியில் மாற்றுதிட்டம் அரசின் பரிசீலணையில் உள்ளதை நடைமுறை படுத்த முயற்சிக்காமல் 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4வது பைப் லைன் திட்டத்தை நிறை வேற்ற மாவட்ட நிர்வாகம் துடிப்பது பல்வேறு சந்தேகங்களை விவசாயிகளிடமும் பொதுமக்களிட மும் ஏற்படுத்தியுள்ளது.2012ம் பாசன ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட பாசன பகுதி 46107 ஏக்கர் நிலங்களில் கார், முன்கார், பிசானம் என்ற முப்போக சாகுபடிகளில் அரசால் அனுமதிக்கப் பட்ட நிலங்களுக்கு ஒரு போகத்திற்கு கூட தண்ணீர் தராமல் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம் என ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் விவசாயத்தை புறக்கணித்து 20 எம்ஜிடி திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்தும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுத்ததினாலும் நிலத்தடி நீரை கூட விட்டு வைக்காமல் தண்ணீரை உறிஞ்சி எடுத்ததினாலும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளு க்கு சுமார் 100கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4வது பைப் லைன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தாமிரபரணி பாசனத்தில் தூத் துக் குடி மாவட்ட விவசாயமே நø டபெறாத நிலை ஏற்படும். எனவே அத்திட்டத்தை ரத்து செய்து விவசாயத்திற்கு உத்தரவாத்தை அரசு தர வேண்டும். என்றார் அவர்.
4வது பைப் லைன் திட்டத்தை ரத்து செய்யும் வரை தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இட ங்களில் பொது கூட்டம் நடத்தி துண்டுப் பிரசுரம் மூலமும் கை யெழுத்து இயக்கம் மூலமும் விவ சாயிகளிடமும் பொது மக்களி டமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் தொடர் போரா ட்டங்களில் ஈடுபடச் செய் வது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன. பாமக மாநில கொள்கை விளக்க அணித்தலைவர் வியனரசு, ஓய்வு பெற்ற கோட்டாச்சித் தலைவர் தலைவர் வரதராஜன், பேரூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவ ஞானவேல், ஆத்தூர் விவசாய சங்க பொருளாளர் கிருஷ்ணகுமார், வடகால் மடைஎண் 1 விவசாய சங்க தலைவர் மதிவானன், மடை எண் 48 நீரினை பயன்படுத்துவோர் சங்க பொறுப்பாளர் சந்திரமோகன், ஸ்ரீவைகுண்டம் விவசாய சங்க பொறுப்பாளர் ராஜவேல், ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம், ஆதிநாதபுரம் ஊர õட்சி மன்ற முன்னாள் தலைவர் நந்த கோபால், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா விவசாய சங்க பொறுப்பாளர் காளி ராஜன், ஓய்வு பெற்ற கருவூல அதி காரி சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஓய்வு பெற்ற சர்வேயர் சம்பத் நன்றி கூறினார். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சி குடிதண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு மாவ ட்ட த்திலுள்ள பல்வேறு பகுதிகளின் குடி தண்ணீர் தேவையையும் விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு விஸ்வரூபம் எடுத்து வரும் 4வது பைப்லைன் திட்ட விவ காரத்தில் பொது மக்களுக்கும்
விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்ப டுத்தும் மருதூர் அணையிலிருந்து நேரடியாக தண்ணீர் எடுப்பதற்கு பதிலாக மாற்று திட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொள் ளும் சிறப்பு கூட்டத்தினை மாவட்ட நிர்வாகத்தினர் கூட்டி விரைவில் நல்லதொரு முடிவு எடு வேண்டுமென சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்