DISTRICT NEWS | சுதந்திர தினத்தில் தேசியக்கொடிக்கு அவமரியாதை அணுஉலை எதிர்ப்பாளர் குண்டர் சட்டத்தில் கைது| Dinamalar

தமிழ்நாடு

சுதந்திர தினத்தில் தேசியக்கொடிக்கு அவமரியாதை அணுஉலை எதிர்ப்பாளர் குண்டர் சட்டத்தில் கைது

Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:சுதந்திர தினநாளில் தேசியக்கொடியை அவமதித்த கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கூடன்குளம் அருகேயுள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் சந்தியாகு ராயப்பன் (எ) பைலட்(33). கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர். அணுஉலையை மூட வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டது, அணு மின்நிலைய ஊழியர்களை வழிமறித்து சிறை பிடித்து அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தது, ஊழியர்களை ஆயுதங்களால் தாக்க முயன்றது, சுதந்திர தின நாளில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் தெருக்கள், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியது தொடர்பாக சந்தியாகு ராயப்பன் மீது பல்வேறு வழக்குகள் கூடன்குளம் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டன. சந்தியாகு ராயப்பன் பாளை., சிறையில் அடைக்கப்பட்டார்.எஸ்.பி., விஜயேந்திர பிதரி, வள்ளியூர் டி.எஸ்.பி., ஸ்டேன்லிஜோன்ஸ், கூடன்குளம் இன்ஸ்பெக்டர் ராஜ்பால் பரிந்துரைப்படி சந்தியாகு ராயப்பனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் செல்வராஜ் உத்தரவிட்டார்.சந்தியாகு ராயப்பனுடன் சேர்த்து இதுவரை அணுஉலை எதிர்ப்புக்குழுவை சேர்ந்த 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை