சேலம்: சேலம் - கரூர் அகல ரயில்பாதையில், தெற்கு ரயில்வே அதிகாரிகள், பயணிகள் ரயில் இயக்குவது குறித்து நேற்று ஆய்வு நடத்தினர்.சேலம் - கரூர் அகல ரயில்பாதை திட்டம் முடிவடைந்த பின், பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டது. கடந்த மாதம், சேலம்- கரூர் ரயில் வழித்தடத்தில், சரக்கு ரயில் போக்குவரத்து துவங்கியது. வட மாநிலங்களில் இருந்து, தினமும், தென் மாவட்டங்களுக்கு, மூன்று முறை சரக்கு ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் வரும் ஜனவரி மாதம் முதல், பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.நேற்று காலை, 8.30 மணிக்கு, தெற்கு ரயில்வே முதன்மை நிர்வாக அதிகாரி விஜயகுமாரன், சேலம் ரயில்வே கோட்ட தலைமை பொறியாளர் நந்தகுமார் மற்றும் பொறியாளர் பிரிவு அதிகாரிகள், சேலம்- கரூர் ரயில் வழித்தடத்தில், பயணிகள் ரயிலை இயக்குவது குறித்து ஆய்வு நடத்தினர். இரண்டு ரயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயிலில் (இன்ஸ்பெக்ஷன் கோச்) கரூர் நோக்கி புறப்பட்டனர்.சேலம் - கரூர் ரயில் வழித்தடத்தில், தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை, தெற்கு ரயில்வேயின் தலைமை பாதுகாப்பு அலுவலகத்துக்கு அளிக்கப்பட உள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன், பயணிகள் ரயில் இயக்கப்படும், என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.