4 hour non stop power for Kovai and thiruppur | கோவை, திருப்பூரில்.. பகலில் 4 மணி நேரம் மின்வினியோகம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (19)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவையில் டெக்ஸ்டைல்ஸ், மோட்டார் பம்ப், வெட்கிரைண்டர், ஆட்டோமொபைல், காயர், பிளாஸ்டிக், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன. தவிர, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்களும் உள்ளன.இவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக வாட்டி வதைத்து வரும் கடுமையான மின்வெட்டு காரணமாக, தொழிற்சாலைகளில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, எண்ணற்ற தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளதால், 70 சதவீத உற்பத்தி பாதித்துள்ளது.

தொழிலாளர்கள் குறைந்த நேரம் வேலை பார்த்தாலும், முழுநேர சம்பளம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளதால், உற்பத்தி பொருட்களின் விலையும் கூடிவிடுகிறது. மற்ற மாநிலங்களில் சீரான மின்சப்ளை உள்ளதால், உற்பத்தி பொருளின் விலை குறைவாக இருக்கிறது.இதனால், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சரியான சந்தை வாய்ப்பும் கிடைப்பதில்லை. இதேபோன்று, திருப்பூர் மாவட்டத்திலும் பனியன் தொழில், வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து, சொந்த ஊரான தென்மாவட்டங்களுக்கே திரும்பச் சென்றுவிட்டனர். பல்லடத்தில் விசைத்தறித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைக்கு வந்து விட்டனர். விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தொழில்துறையினர், சீரான மின்வினியோகம் வேண்டி, பல்வேறு போராட்டங்களை நடத்தி ஓய்ந்தே போய்விட்டனர். தற்போது, மின்வெட்டு 16 மணி நேரமாக அதிகரித்துள்ள நிலையில், எப்போதெல்லாம் மின் சப்ளை இருக்கும் என்பதை அறிவிப்பது தொடர்பான ஆய்வை நடத்தி வருகிறது, மின்வாரியம். பகல் மற்றும் இரவில் தலா 4 மணி நேரம் மட்டும் மின்சப்ளை செய்து, மற்ற நேரங்களில் மின்வெட்டு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு தினமும் அதிகபட்சம் 8 மணி நேரம் மட்டுமே மின்சப்ளை செய்ய முடியும். அதில், பகலில் 4 மணி நேரமும், இரவில் 4 மணி நேரமும் பகிர்ந்து வழங்கப்படும். தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று பகலில் 4 மணி நேரம் தடையின்றி மின்சப்ளை கொடுக்க திட்டமிடப்படும். காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரையான 12 மணி நேரத்தை நான்கு "ஷிப்ட்'டாக பிரித்து, ஒவ்வொரு "ஷிப்ட்'டிலும் 4 மணி நேரம் மின்சப்ளை வழங்கப்படும். காலை 6.00 முதல் 10.00 மணி, காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி, மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி என, ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுக்கி மின்சப்ளை செய்யப்படும். மற்ற நேரத்தில் மின்வெட்டு ஏற்படும்.மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரையான 12 மணி நேரத்தில், ஒரு மணி நேரம் மின் சப்ளை, இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும். மின் ஒதுக்கீடு கூடுதலாக கிடைத்தால், அதற்கேற்ப மின்சப்ளை நேரம் அதிகரிக்கப்படும்.

கூடுதல் மின்சப்ளை நேரம் பற்றி தற்போதைய சூழ்நிலையில் உத்தரவாதம் ஏதும் தர முடியாது. இவ்வாறு, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பகலில் 8 மணி நேரம் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டால், மக்கள் பெரிதும் அவதிக்கு

உள்ளாவர். வீடு, கடைகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் பால், தயிர், காய்கறி உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. தொடர் மின் வெட்டு ஏற்படும் பட்சத்தில் இவை, கெட்டுப்போய்விடும். மேலும், மின்வெட்டுக்கு நிவாரணம் தேடும் முயற்சியாக நடுத்தர மக்களில் பலரும், வீடுகளில் யு.பி.எஸ்., சாதனங்களை, 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டு நிறுவியுள்ளனர். இவையும் இயங்காமல் முடங்கிவிடும். இது போன்று மேலும் பல நடைமுறை பிரச்னைகள் இருப்பதால், தொடர்மின்வெட்டுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

வேதனையே மிச்சம்!
ஜெயலட்சுமி, குடும்பத்தலைவி: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்வெட்டு உள்ளது. வீட்டில் சமைப்பது முதல், தூங்குவது வரையிலும் மின்வெட்டால் வேதனைதான். இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்குமென்றால் வேதனை அதிகரிக்கும்.

சாந்தி, குடும்பத்தலைவி: இனிமேல் பகலில் நான்கு மணி நேரம்தான் மின்சப்ளை என்றால், வீட்டு வேலைகள்கூட செய்ய முடியாது. மின்வெட்டால், இரவு நேரத்தில் கொசு தொல்லை அவதி, திருட்டு பயம், வாகன விபத்து ஏற்படுகிறது. வீட்டுக்கு யாராவது வந்தால் கூட, கதவைத்திறக்க பயமாக உள்ளது.

கனகமணி, தனியார் ஊழியர்: வீட்டு வேலைகளை முடித்து, வேலைக்கு செல்ல வேண்டும். காலை நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் சமையல் பணி பாதிக்கிறது. பகல் முழுவதும் வேலை செய்யும் இடத்தில் மின்வெட்டால் அவதிப்படுகிறோம். மாலை வீடு திரும்பும் போது, மின்சப்ளை இருப்பதில்லை. இரவில் எப்போது மின்சப்ளை இருக்கும்என்பது தெரியாது. குழந்தைகள் கல்வி, ஆரோக்கியம் பாதிக்கிறது.

கலைவாணி, தனியார் ஊழியர்: வீட்டில் காலை, மாலை நேரத்தில் சமைக்க செய்ய முடிவதில்லை. இலவச மிக்சி, கிரைண்டர், பேன், கொடுப்பதில் பலனில்லை. இனிமேல் முந்தைய காலம் போன்று, அம்மிக்கல், ஆட்டாங்கல்லை பயன்படுத்த வேண்டும். வீட்டில் யு.பி.எஸ்., பிரிட்ஜ் வைத்திருந்தாலும் பயன்படுத்த முடிவதில்லை. குழந்தைகள் படி ப்பு முழுமையாக பாதிக்கிறது.

ஷாஜிதாபானு, சுய தொழில்: கோவையில் கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் சென்டர் வைத்துள்ளேன். மின்வெட்டு அதிகரித்ததால் எந்த பணியும் செய்ய முடிவதில்லை. யு.பி.எஸ்., வைத்திருந்தாலும் தொடர்மின்வெட்டால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஜெனரேட்டர் வைத்து தொழில் நடத்தினால், ஜெராக்ஸ் கட்டணம் அதிகரித்து மக்கள் பாதிக்கின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்கு மாலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மின்சப்ளை வழங்க வேண்டும். தொழிற்சாலை பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

தொழில்துறையினர் அதிருப்தி
கல்யாணசுந்தரம் (தமிழ்நாடு பம்ப் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர்):தமிழகத்தின் மின்தேவை, 12 ஆயிரம் மெகாவாட். தற்போது கிடைப்பதோ 8,000 மெகாவாட். இதை மாநிலம் முழுவதும் சமமாக பகிர்ந்து கொடுத்தால், தினமும் ஏற்படும் மின்வெட்டை எட்டு மணி நேரமாக குறைக்கலாம்.

Advertisement

சென்னைக்கு 22 மணி நேரம் மின்சப்ளை கொடுப்பதால், கோவை தொழிற்சாலைகள் நசுக்கப்படுகின்றன. சிறு, குறு தொழிற்சாலைகள் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. மற்ற மாநிலத்துடன் போட்டி போட முடியாததால், தமிழகத்தின் தொழில்வர்த்தகம் பாதித்துள்ளது. மின்சாரம் பொதுப்பட்டியலில் உள்ளதால், இந்த பிரச்னையில் மத்திய அரசும் கவனம் செலுத்த வேண்டும். பகலில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரமும், இரவில் எட்டு மணி நேரமும் மின்சப்ளை வழங்க வேண்டும். இல்லாவிட்டால், மின்வெட்டுக்கு பொறுப்பேற்று, கோவை மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ரவிக்குமார் (கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க தலைவர்):பகலில் 4 மணி நேரம் மின்சப்ளை கொடுத்தால், தொழில் துறையை காப்பாற்ற முடியும் என்பது தவறான கருத்து. பகலில் எட்டு மணி நேரம் மின்சப்ளை வேண்டும். கோவையை மூன்று டிவிஷனாக பிரித்து, நான்கு மணி நேரம் மின்சப்ளை கொடுப்பது ஏற்புடையதாக இல்லை. தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகேஸ்வரன், (சிறு தொழில் முனைவோர், கோவை):தொழில்நகரம் என்ற அந்தஸ்தை கோவை இழந்து வருகிறது. தொழில்துறையை நம்பியிருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல்தவிக்கிறோம். சென்னையை மட்டும் கவனிக்கும் மாநில அரசு, தொழில் நகரத்தை மறந்து விட்டது. வங்கிகளில் கடன் வசூலிக்க நெருக்கடி, தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. இயங்காத தொழிற்சாலைக்கு மின்கட்டணம் செலுத்துகிறோம். இப்படி, இருந்ததையெல்லாம் இழந்து விட்டோம், இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை. மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வரையிலும், பெரிய தொழிற்சாலைகளுக்கு டீசலுக்கு வரி விலக்கு கொடுப்பது, மின்வெட்டை குறைக்கும்.

டீசலுக்கு வரிவிலக்கு தேவைஜேம்ஸ் (தமிழ்நாடு ஊரக தொழில் மற்றும் கைத்தொழில் முனைவோர் சங்கம்)
: மின்வெட்டால், கடந்த நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. முன்பு, நாளொன்றுக்கு நான்கு மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 16 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இதுவரை, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது புரியாத புதிராக இருந்தது. தற்போது, மின்வாரியம் எடுத்துள்ள புது முயற்சியால் மின்வெட்டு நேரம் முன்கூட்டியே தெரியும்; எனினும், இதனால், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு பயன் இருக்கும் என்பது, நடைமுறையில் தெரியும். பெரும் தொழிற்சாலைகளுக்கு, டீசல் மீதான வரியை விலக்கினால், மின்வெட்டு நேரத்தை ஓரளவு குறைக்கலாம்.

குறையுமா மின்வெட்டு?கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேல் கூறுகையில், ""மின்வெட்டு நேரத்தை மாற்றுவது பற்றி தொழில்துறையினரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கோவைக்கு பகலில் மூன்று ஷிப்ட்களில் 4 மணி நேரம் தொடர்ந்து மின்சப்ளை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரவில் மின்வெட்டு நேரங்களும் ஆய்வில் உள்ளது. மின்சப்ளை நேரம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மின் ஆற்றல் கூடுதலாக கிடைத்தால், மின்வெட்டு நேரம் குறையும். இதில், மின்வாரியத்தின் கையில் எதுவும் இல்லை,'' என்றார்.- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Andrewdass - Tirupur,இந்தியா
07-டிச-201213:13:32 IST Report Abuse
Andrewdass அமெரிக்காவை போல ஒரு சர்வாதிகார அரசு இந்தியாவுக்கு தேவை... அப்போது தான் மத்திய, மாநில அரசு என்ற பிரிவினை இல்லாத ஒரு புதிய அரசு உருவாகும். மக்கள் மீது அக்கறை இல்லாத இவர்களை என்ன செய்வது?... இந்த தொடர் மின்வெட்டால் ஒரு காலத்தில் முதலாளியாக இருந்தவன் இப்போது தொழிலாளி ஆகிவிட்டான். (காமராஜர் ஆட்சியை போல) மக்களின் கண்ணீரை துடைக்க ஒரு நல்ல சுயநலமற்ற அரசு உருவாக வேண்டும்... விழித்தெழு தமிழக அரசே... சுயநலமிக்க தமிழக அரசே இந்த பாமர மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்லு....?
Rate this:
Share this comment
Cancel
swedha booshidhaa - pearl city - tamilnadu ,இந்தியா
06-டிச-201214:57:02 IST Report Abuse
swedha booshidhaa மின் வெட்டு பிரச்சினை வரும் களத்தில் தீர போவது கலைஞர் போட்ட மின் திட்டங்களால் தான். ஆயா இது வரை ஒரு ஆணியும் புடுங்கல.கலைகரையும் மதிய அரசையும் குற்றம் சொலிட்டு இருப்பதை தவிர.........
Rate this:
Share this comment
Cancel
swedha booshidhaa - pearl city - tamilnadu ,இந்தியா
06-டிச-201214:54:28 IST Report Abuse
swedha booshidhaa கலைஞர் மற்றும் ஆற்காடு வீராசாமி அவர்களை நினைத்து பார்க்க வைத்து விட்டார்கள் ஜெயாவும் நத்தமும்.
Rate this:
Share this comment
Cancel
swedha booshidhaa - pearl city - tamilnadu ,இந்தியா
06-டிச-201214:48:28 IST Report Abuse
swedha booshidhaa திமுக ஆட்சியில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிக விலை கொடுத்து தனியார் மற்றும் அண்டை மாநிலங்களில் வாங்கி கொடுக்க பட்டது. நஷ்டத்தை மின்சார வாரியம் மட்டும் ஏற்று கொண்டது. காரணம் மின்சார வாரியம் சேவை துறை என்பதால்.ஆனால் நான் எனது என்று இறுமாப்பு பேசும் ஆயா ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக கூட்ட பட்டது.சேவை துறையை கம்பனியாக மாற்றியதால் நஷ்டம் மக்களிடம் கொடுக்க பட்டது. கலைஞர் ஆட்சியில் மின்வாரியம் நஷ்டத்தை ஏற்று கொண்டு மக்களையும் அவர்களது தொழிலையும் காப்பாற்றியது. restriction அண்ட் control measure மூலம் இரவில் peak hour எனப்படும் மலை 6 மணி முதல் இரவு பாத்து மணி வரை தொழிற்சாலைகளுக்கு மின் கட்டு பாடுகள் விதிக்க பட்டு. மக்களுக்கும் வணிகத்திற்கும் தடியின்றி மின்சாரம் வழங்க பட்டது. மாணவர்கள் நிம்மதியாக படித்தார்கள் . அஆனல் இன்று மக்களை பற்றி சிறிதும் கவலை இல்லாத இந்த ஜெயா அரசு மின்சாரத்தை தற்போது தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்காமல் ( கரணம் கமிசன் ) மக்களை யும் வணிகர்களையும் தொழிற்சாலைகளையும், மாணவர்களையும் துன்புர்த்தி கொண்டு உளது. கலைஞர் திட்டமிடப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் செயல் பட தொடங்கும் பொது மின் மிகை மாநிலம் ஆகி நாமும் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்று மின்வாரியம் தற்போது சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடுகட்டலாம். மேலும் மின்வரியதிற்கு நஷ்டம் 5 வருடங்களில் 40000 கோடி நஷ்டம் வந்தது தற்போது ஜெயா வந்ததில் இருந்து இதுவரை மக்களுக்கு லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் வந்தாச்சு. மின்சாரம் அத்தியாவசிய தேவை.மின்சாரம் இலையெனில் மற்ற பொருட்களின் விலையும் எவரெஸ்ட் அளவிற்கு உயரும்...பொருளாதார சிந்தனையும் இல்லை...டாஸ்மாக் லாபத்தை வைத்து மின்சாரத்தை வாங்கினால் மக்கள் பணம் மக்களுக்கு பயன் பட்ட மாதிரி இருக்கும். டாஸ்மாக் பணத்தை வைத்து இலவசம் கொடுதக்ல் நாடு நல்ல இருக்கும்.... இந்த சேகர் சேகரன், பன்னாடை , ராதாகிருஷ்ணன் , ஜெய் போன்ற சொம்புங்க ஜெயாவுக்கு ஜால்ரா அடிகிறத நிறுத்துங்க.... எதையு செய்ய துப்பு இல்லாத ஜெயா இதுவரை என்னத்தை நல்லது பண்ணி இருகாங்க. மக்களை முட்டல நினச்சு எல்லாத்தையும் அரசியலகுறது இந்த சொம்புங்களும் ஜெயாவும்...எதையாவது சாதிசிருகிங்கள ....காவேரி, மின்வெட்டு , இலங்கை பிரச்சினை எல்லாத்தையும் ஜ.....டாஸ்மாக் கை கொண்டு வந்ததே செய்தான்.... அந்த மிடாஸ் ............. யாருடைய கம்பெனி...............மத்திய அரசாங்கத்திடம் கலைஞர் மின்சாரம் பெரமால்தான் சமாளித்தார்..... இப்ப எதுக்கு மத்திய அரசாங்கம் மின்சாரம் கொடுக்கலைன்னு சொல்றிங்க... எங்களுக்கு நீங்களும் தன மின்சாரம் தர மாட்டேன்றீங்க. சென்னைக்கு மட்டும் கொடுக்றீங்க... நினச்சா எல்லோருக்கும் .பகிர்ந்து கொடுக்க முடியாதா. முதல்ல நீங்க கொடுங்க.... அப்றம் மத்திய அரசாங்கம் கிட்ட கேக்கலாம்.முடியலைன வாய் சவடால் பண்ணாம ஆக வேண்டிய வேலையை மட்டும் பாருங்க.....
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
06-டிச-201201:09:14 IST Report Abuse
Thangairaja மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு தேவை. ஆக்கபூர்வ நடவடிக்கைக்கு அரசை தூண்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vijayakumar Iyyadurai - THOOTHUKUDI,இந்தியா
05-டிச-201221:57:29 IST Report Abuse
Vijayakumar Iyyadurai அம்மா மீதுள்ள அனைத்து நம்பிக்கையும் போய் விட்டது. ஒவ்வொரு மக்களும் ரொம்ப ரொம்ப கஷ்டபடுகின்றனர். உன்ன முடியவில்லை உறங்க முடியவில்லை சாப்ட முடியவில்லை. குழந்தைகள் வயதானவர்கள் மிகவும் கஷ்ட படுகின்றனர். உண்மையில் நாம் ஜன நாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் வந்து விட்டது மொத்தத்தில் தினம் தினம் செத்து கொண்டிருகோம்
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
05-டிச-201221:05:21 IST Report Abuse
Loganathan Most of the industries in Coimbatore area are started and run by people from Tamil Nadu whereas the industries in Chennai are run by multinationals with workeers from other states
Rate this:
Share this comment
Cancel
சக்தியபிரியன் - மயிலாடுதுறை  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201218:02:26 IST Report Abuse
சக்தியபிரியன் கரண்ட் பிரசனை உடநடியாக தீர வேண்டும் என்றால் அது வெரும் குடிமகனால் முடியாது தமிழ்நாடு அரசு நாட்டுன் முக்குய தேவையான டாஸ்மாக்கில் மட்டும் கவணம் செலுத்துகிரது ஆண்டு வருமானம் 25,000 கோடி ருபாயாம் ஆகையால் தடைஇல்லா மின்சாரம் கிடைக்கும் வறை குடிக்கமாட்டோம் என்று போராட்டம் செய்தால் அரசு உடநடி நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கின்றேன்
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
05-டிச-201222:06:03 IST Report Abuse
mohanதேசிய நாடகம்.. தமிழ் நாட்டை மட்டும் பொருத்தது அல்ல. நமது மந்திரிகள் எப்பொழுதாவது இதை பற்றி பார்லிமெண்டில் பேசி இருகிறார்களா......
Rate this:
Share this comment
Cancel
சக்தியபிரியன் - மயிலாடுதுறை  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201217:23:00 IST Report Abuse
சக்தியபிரியன் நாட்டை நிர்வகிக்க என்றைக்கு படித்தவர்களை தேர்வு சேய்கிறோமோ அப்பதான் நாடு உருப்படும் நாம் தான் சாராயம் காயிச்சிபன் கட்டபஞ்சாயத்துபன்றவன் &*;"*&*விர்பவர் என்றும் -----, -----,-----,-----, ----- இல்லாதவர் . கும்புடு போடதெரிந்தவர்களை மட்டும் தானே நம்பி நாட்டை கொடுக்குறோம்
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
05-டிச-201213:15:15 IST Report Abuse
mohan மத்தியில் முக்கியமான நான்கு மந்திரிகள். நல்ல நாடகம் நடக்குது. தமிழ் நாட்டிற்கு மின்சாரம் கொடுக்க கூடாது என்று. மூன்று வருடங்களாக கூடங்குளம் நாடகம், இபொழுது மின்சார பாதை இல்லை என்ற நாடகம். அரசியல் வாதிகளே எதில் எப்படி விளையாடுவது என்று உங்களுக்கு வரைமுறை இல்லையா. கலி காலம் முத்திப்போச்சு. பாவம் சாதாரண மக்கள் என்ன நடக்குது என்று தெரியாமல் முழிக்கின்றனர். என்ன செய்வது நேர்மையான தலைவர்கள் தமிழ் நாட்டில் இல்லை. ஒரு சிலர் இருந்து என்ன செய்ய....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.