ஈரோடு: ஈரோட்டில், மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களின், 5வது மாநாடு நடந்தது.
கடந்த, ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பணி வழங்க வேண்டும்.கடைகளுக்கு தேவையான, அளவுக்கு மட்டும் சரக்குகள் அனுப்ப வேண்டும். கூடுதலாக அனுப்பக் கூடாது. அனைத்து கடைகளுக்கும், குளிர் சாதனப்பெட்டி, கழிப்பிட வசதி, ஜெனரேட்டர் வசதி செய்து தரவேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல், உடனடியாக அமுலாக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளுக்கும் ஏற்படும் மின்சார கட்டணம் முழுவதும் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை உறுதியாக அமுலாக்க வேண்டும். ஊழியர்களின் பொது கோரிக்கைகள் மீது தொழிற்சங்கத்தினரிடம் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். துணை தலைவர் யுவராஜ் வரவேற்றார். டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சி.ஐ.டி.யு.,) மாநில பொதுச்செயலாளர் திருட்செல்வன், பொதுச்செயலாளர் பொன்பாரதி, பொருளாளர் சோமசுந்தரம் ஆகியோர் பேசினர். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் முருகையா நன்றி கூறினார். புதிய மாவட்ட தலைவராக சுப்பிரமணி, மாவட்ட பொது செயலாளர் பொன்பாரதி, பொருளாளர் சோமசுந்தரம் மற்றும் 22 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.