ஆமதாபாத்: ராகுலுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி என்ற பழி சொல்லுக்கு ஆளாக வேண்டும் என்ற பீதியில் குஜராத் தேர்தல் பிரசாரத்தை தவிர்க்கிறார் என முதல்வர் நரேந்திரமோடி கூறினார்.
குஜராத் சட்டசபைக்கு வரும் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த சில தினங்களாக குஜராத் தேர்தல் பிரசார யுத்தம் சூடு பிடித்து
வருகிறது. நேற்று முன்தினம் பா.ஜ.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து காங். கட்சியும் நேற்று , தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.இருமுறை முதல்வராக உள்ள நரேந்திரமோடி மீண்டும் முதல்வர் பதவிக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பிரசார யுக்தியை கையாண்டு வருகிறார். நேற்று 3-டி தொழில்நுட்பத்தின் மூலம் 52 இடங்களில் பிரசாரத்தினை நிறைவு செய்தார் மோடி.
ராகுலுக்கு தோல்வி பயம் :
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மோடி அவர்கள் குஜராத்தை விட்டு வெளியே வந்து உ பி மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு பொறுப்பாளராக வந்து அதிக குண்டாஸ் ராஜ்ஜியம் நடுத்தும் யாதவையும் பிரசங்கி நிதிஷையும் வீட்டுக்கு அனுப்பி அங்கே பி ஜே பி ஆட்சியை கொண்டு வரவேண்டும். அதன் பிறகு ஜெயா, நவீன் பட்நாயக், மம்தா, சந்திரபாபு நாயுடு அல்லது ஜெகன்மோகன் என்று கூட்டணி வைக்க வரிசையில் நிற்பார்கள். முரண்டு பிடிக்கும் நிதிஷுடன் கூட்டணி வைத்து மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதை விட தனித்து நின்று முதலாவது அல்லது லாலு பிரசாத் கட்சிக்கு அடுத்தபடியாக இர்ண்டாவதாக வரலாம்.பி ஜே பி கைவிட்டால் நிதிஷ் தனது கட்சி பீகாரில் நான்காவது கட்சியாகத்தான் வரும் என்பதை உணர்ந்தும் அதிகம் பேசுகிறார் என்றால் அதற்கு வெட்டி திமிர் மட்டுமே காரணம்.
டெல்லி அரசு திருப்பி கொடுக்கும் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். இதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. அரியானா மாநிலம் சஜ்ஜாரில் உள்ள இந்திரா காந்தி அனல் மின் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வழங்கப்பட்டு வரும் 231.17 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு திருப்பித்தர முடிவு செய்தது. இதையடுத்து மத்திய அரசு டெல்லி திருப்பி தந்த மின்சாரத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கேரளாவுக்கு 100 மெகாவாட்டும், ஆந்திராவுக்கு 131.17 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்குகிறது. மத்திய மின் தொகுப்பில் இருந்து கேரளாவுக்கு தற்போது 1200 மெகாவாட் மின்சாரம் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக 100 மெகாவாட் கிடைக்கிறது.
மத்திய அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காமலேயே கேரளாவுக்கு மின்சாரம் கிடைத்ததால் கேரள மின் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் கொண்டு செல்ல தென் மாநிலங்களில் கிரிட் இருக்கும் பொது தமிழ் நாட்டுக்கும் மட்டும் கிரிட் இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்தப் பொய். இதில் உள்ள திரைமறைவு வேலைகள் நம் தமிழ் தாத்தாவுக்கே வெளிச்சம்...........
நாற்பது வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யவில்லை இவர் வழி இன்னும் ஒரு காந்தி வாரிசாக பிறக்கவில்லை நேரு குடம்பத்து வழக்கப்படி இவரும் ஒரு வெளிநாட்டு பெண்ணோடு காதல்வயபடவில்லை என்று சொன்னால்,,, இதையெல்லாம் நம்புங்கள். அப்படியே ராகுல் பிரச்சாரத்திற்கு போனால் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும் என்பதையும் நம்புங்கள்.
ராகுல் பிரச்சாரத்திற்காக சென்ற இடமெல்லாம் காங்கிரசுக்குத் தோல்வியே ஏற்படும் என்ற கருத்து அரசியல் நோக்கர்களிடம் உறுதியாக ஏற்பட்டு விட்டது அக்கருத்து ராகுல் குஜராத் சென்றால் மேலும் வலுப்படும் என்ற காரணத்தாலேயே ராகுல் இதுவரை அங்கு பிரச்சாரம் செய்யவில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது மோதி புதிதாக எதையும் கண்டுபிடித்துக் கூறவில்லை

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.