சென்னிமலை: சென்னிமலை பகுதியில் விசைத்தறியில் உற்பத்தியாகும் மோட்டா ரக பெட்ஷீட்டு ரகங்களுக்கு, தற்போது வடமாநிலங்களில் இருந்து அதிகளவு ஆர்டர்கள் வரத்து வங்கியுள்ளது. தொடர் மின் தடையால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னிமலை பகுதியில் உள்ள விசைத்தறிகளில் பல்வேறு ரகங்களில் பெட்ஷீட் உற்பத்தியாகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு ரக பெட்ஷீட் ரகங்களுக்கும் மவுசு இருக்கும். தற்போது வடமாநிலங்களில் குளிர்காலம் ஆரம்பமாகி உள்ளதால், மேட்டா ரகங்களில் உற்பத்தியாகும் பெட்ஷீட் ரகங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளதாக, விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். அதே சமயம் தொடர் மின்தடையால் பெட்ஷீட் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறியாளரை வேதனையடைய செய்துள்ளது.சென்னிமலை பகுதியில் ஐந்து ஆயிரம் விசைத்தறிகள் இயங்குகிறது. இதில் அதிக அளவு, 10ம் நெம்பர் நூலை பயன்படுத்திதான் பெட்ஷீட்கள் உற்பத்தியாகிறது. மோட்டா ரகமான ஆறாம் நெம்பர் நூலை பயன்படுத்தி, 700 தறிகள்தான் இயங்குகின்றன. இந்த ரக பெட்ஷீட்களுக்கு வழக்கமாக எப்போதும் கிராக்கி ஏற்படாது. இந்த ஆண்டு வடமாநிலங்களில் நல்ல குளிர் இருப்பதால் இந்த ஆறாம் நெம்பர் நூலில் உற்பத்தி செய்யப்படும் மோட்டா ரக பெட்ஷீகளுக்கும், ஜக்காடு ரக பெட்ஷீட்களுக்கும் கிராக்கி கூடியுள்ளது.பாவுக்கு, 10ம் நெம்பர் நூலும் ஊடைக்கு, 6ம் நெம்பர் நூலும் பயன்படுத்துவதால் பெட்ஷீட் திண்ணமாக தெரியும். இந்த மோட்டா ரகத்தில், பல ரகங்கள் இருந்தாலும் குறிப்பாக, சப்போட்டா என்ற ரகம் அதிக மவுசில் உள்ளது. அதை அடுத்து சோலாப்பூர், சுரபி ஜக்காடு ரகங்களுக்கு கிராக்கி உள்ளது. இந்த ரக பெட்ஷீட்கள் உற்பத்தி குறைவாக உள்ளதால் தற்போது வடமாநில மக்களிடம் கிராக்கி இருப்பதால் விலை சற்று கூடியுள்ளது. இந்த விலையேற்றம் விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.இந்த மேட்டாரக போர்வைகள் சென்னிமலை அதை அடுத்து முத்தூர், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் அதிக உற்பத்தியாகிறது. ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் இந்த ரக பெட்ஷீட்களுக்கு கிராக்கி கூடியுள்ளது. இந்த நேரத்தில் தொடர் மின் உற்பத்தியால் பெட்ஷீட்கள் உற்பத்தி கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறியார்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.