சேலம்: மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு, எட்டு மணி நேர வேலை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள், நேற்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணி மற்றும் கோரிக்கை ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. சேலத்தில், சுந்தர் லாட்ஜ் முன் துவங்கிய பேரணி, கலெக்டர் அலுவலகம் முன் நிறைவடைந்தது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க மாநில தலைவர் செல்வன் பேரணியை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் செந்தில்வடிவேல், சி.ஐ.டி.யூ., மாநில துணைத்தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கோபிகுமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், மருந்து நிறுவனங்கள், விற்பனை பிரதிநிதிகளுக்கு, எட்டு மணி நேர வேலையை வழங்க வேண்டும். பி.ஃஎப், இ.எஸ்.ஐ., கிராஜுவிட்டி, பென்சன் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளமாக, பத்து ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு, அத்தியாவசிய மருந்துகள், நியாயமான விலையில் கிடைக்க செய்ய வேண்டும். பெண் மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு, ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.