நாமக்கல்: ""பால் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, 2013 பிப்ரவரியில், மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் முகமதுஅலி கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு, 2011ம் ஆண்டு நவம்பரில், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு, இரண்டு ரூபாய் உயர்த்தி வழங்கியது. அதன்பின், பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. கடந்த, மூன்று மாதங்களில் தீவனத்தின் விலை, 30 முதல், 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.தீவன விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த, 12 ஆண்டுகளில், 4,000 ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் வருமானமின்றி செயல்பட முடியவில்லை.தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில், 19 ஆயிரம் பணியாளர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, ஆவினுக்கு இணையாக ஊதியம் வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு உள்ளது. ஆனால், அதிகாரிகள் தனியார் பால் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப, ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை முறையாக நடத்த வேண்டும்.பால் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஃபிப்ரவரி மாதம், மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.