ரோம்: இத்தாலியில் ஒன்றரை வயது மகனை பாலத்தில் இருந்து ஆற்றில் வீசியெறிந்த குடிகார தந்தைக்கு கோர்ட் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தாலியின் தலைநகர் ரோமைச் சேர்ந்த பாட்ரிசோ பிரான்சிஸ்செல்லி (29), இவரது மனைவி ஜெர்மானோபோலினி, இவர்களின் ஒன்றரை வயது மகன் கிளாவுடியோ, பிரான்சிஸ்செல்லி மதுவுக்கு அடிமையானவன், இவன் மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்றான். சிறையில் அடைக்க போலீசார் அவனை அழைத்துச் சென்றனர். அப்போது மனைவி தனது மகனுடன் வந்திருந்தார். திடீரென மனைவியுடன் இருந்த மகன் கிளாவுடியோவை பறித்துக்கொண்டு ஓடினான் அங்கிருந்த திபெர் ஆற்றின் பாலத்தில் இருந்து மகனை வீசி எறிந்து கொன்றான். தப்பியோட முயன்றபோது கைது போலீசார் கைது செய்தனர். வழக்கு ரோம் கோர்ட்டில் நடந்தது. நேற்று நடந்த விசாரணையில் பாட்ரிசோ பிரான்சிஸ்செல்லிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.