ரியோடிஜெனிரோ: பிரேசிலி்ல் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் 60 போலீசார் கைது செய்யப்பட்டனர். லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் போதை மருந்து கடத்தல் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இக்கும்பல்களுடன் அந்நாட்டு போலீசார் சிலர் தொடர்பு வைத்துள்ளதாகவும், லஞ்சம் பெற்று சமூக விரோத செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தை தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். ரியோடி ஜெனிரோவின் குடிசை நகரான டிக்யூடி காகஸியாஸில் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் அந்நகரில் தலைமை போலீஸ் அதிகாரி கிளவ்டியோ டி லுகாஸ்லிமா உள்பட 60 -க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பிரேசில் நாட்டில் வரும் 2014-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகளும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் நடக்க உள்ளன. இதனையடுத்து பிரேசிலில் குற்றச்செயல்களை குறைக்க அந்நாட்டு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் போலீசாரே சமூக விரோதிகளுக்கு துணைபோயிருப்பது அந்நாட்டு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.