அழகர்கோவில்:வைகை அணையில் இருந்து, 20 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதால், 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் கருகும்
அபாயத்தில் உள்ளது.
அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 15 (இருபோகம்) மற்றும் செப்., 15ல் (ஒருபோகம்) தண்ணீர் திறப்பது வழக்கம். 2011ல், பெரியாறு அணை (நீர்
மட்டம் 136 அடி), வைகை அணை (71 அடி) முழு கொள்ளளவை எட்டியது. இதனால், நூறு நாட்களுக்கு மேல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு பருவமழை
பொய்த்ததால் அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை.விவசாயிகள் கோரிக்கை நிராகரிப்பு: "குறைந்த நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறப்பதால் பயனில்லை. அணைகள் நிரம்பாததால் வைகையில் இருந்து தண்ணீர் திறக்க
வேண்டாம். தண்ணீரை சேமித்து வைத்து 2013 ஜூனில் திறந்து
விட்டால், இருபோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வோம்,' என விவசாயிகள் கோரினர். ஆனால், பொதுப்பணித்
துறையினர் கேட்கவில்லை.
"மழை பெய்யும்' என நினைத்து, தண்ணீரை திறந்து,
20 நாட்களிலேயே நிறுத்தி விட்டனர். தண்ணீருக்கு வழியில்லாததால், மதுரை, திண்டுக்கல்,
சிவகங்கையில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 432 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் கருகி வருகின்றன.
நஷ்டஈடு எதிர்பார்ப்பு:
பெரியாறு பாசன கோட்ட தலைவர் அருள்: நவம்பரில் மழை பெய்யாது. இது தெரிந்தே வைகையில் தண்ணீர் திறந்தது தவறு. தண்ணீரை சேமித்து வைத்து ஜூனில் திறந்திருந்தால், பயனுள்ளதாக இருந்திருக்கும். எங்கள் கோரிக்கை ஏற்கவில்லை.
ஐந்தாவது பிரிவு கால்வாய் பாசன கோட்ட தலைவர் ராம
கிருஷ்ணன்: வைகை அணையில் இருந்து 20 நாட்களுக்கு
மட்டும் தண்ணீர் திறந்தது இதுவே முதல்முறை. மழை பெய்யும், என நினைத்து
தண்ணீர் திறந்தது தவறு. மழை பெய்யாததால், பயிர்கள் கருகி வருகின்றன. விவசாயிகள் நலன் கருதி, அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.