Advertisement
உஷார்...!களப்பணியில் மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திண்டுக்கல்:டெங்கு காய்ச்சலால் திண்டுக்கல் மாவட்டத்தில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களப்பணியாளர்கள் நாள்தோறும் 75 வீடுகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் 2 சிறுமிகள் உயிரிழந்திருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 236 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார களப்பணியாளர்கள் தனித்தனி குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் குறைந்தது 75 வீடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உஷார்: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.