சிவகங்கை:சிவகங்கையில்,மின்வெட்டு காரணமாக குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நகராட்சியில் நாள் ஒன்றுக்கு நபருக்கு 90 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். 38 லட்சம் லிட்டர் தேவை.காளையார்கோவிலில் இருந்து காவிரி குடிநீர் திட்டம் மூலம் 30 லட்சம் லிட்டரும், 8 லட்சம் லிட்டர் இடைக்காட்டூர் குடிநீர் திட்டத்தில் இருந்தும் சப்ளையாகிறது.
இந்த தண்ணீர் சிவகங்கை காளவாசலிலுள்ள சேகரிப்பு தொட்டிக்கு வந்து,பின்,மதுரை முக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் நிரப்பி, வினியோகிக்கப்படுகிறது.
தினமும் தொடர்ந்து 8 மணி நேரம் மின் மோட்டாரை இயக்கினால் மட்டும், 38 லட்சம் லிட்டரை தண்ணீரை நிரப்பலாம்.
தற்போதைய மின்வெட்டை சமாளிக்க, நகராட்சி நிர்வாகத்தில் உள்ள,இடைக்காட்டூரில் ஜெனரேட்டர் மூலம் தொடர்ந்து குடிநீர் எடுக்கப்படுகிறது.
குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காளையார்கோவில், காளவாசல் தொட்டிகளில் இருந்து,முழுமையாக தண்ணீர் பெற ஜெனரேட்டர் வசதியின்றி குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நகராட்சி இன்ஜி.,வரதராஜன் கூறுகையில்,"" இடைக்காட்டூர் குடிநீர் திட்டத்தில் ஜெனரேட்டர் உதவியுடன் தண்ணீர் எடுக்கப்பட்டு தொடர்ந்து சப்ளை செய்கிறோம்.
மின்வெட்டால் நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்ற சிரமம் உள்ளது, என்றார்.
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் கூறுகையில்,""விரைவில் காளையார்கோவிலுக்கு ஜெனரேட்டர் வரும். இதன் மூலம் தொடர்ந்து குடிநீர் சப்ளை செய்வோம்.
காளவாசல் சேகரிப்பு தொட்டிக்கும்,ஜெனரேட்டர் கேட்டுள்ளோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.