DISTRICT NEWS | மின்தடையால் அவதியுறும் ரயில் பயணிகள் | Dinamalar

தமிழ்நாடு

மின்தடையால் அவதியுறும் ரயில் பயணிகள்

Added : டிச 05, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம்: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரவில் ராஜபாளையம் வரும்போது, மின்தடை நேரமாக இருப்பதால், முன்பதிவு பயணிகள், ஒதுக்கப்பட்ட பெட்டியை தேடி அலைகின்றனர்.
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இரவு 8.20 மணிக்கு ராஜபாளையம் வருகிறது. இங்கு இரவு 8 மணி முதல் 9வரை மின்தடை உள்ளது. ஸ்டேஷன் ஜெனரேட்டர்கள் மூலம் டிக்கெட் கவுன்டர், ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு மட்டுமே மின்சப்ளை உள்ளது.
பிளாட்பாரம் இருட்டாக உள்ளது. ரயில் ஐந்து நிமிடம் நிற்கும் நிலையில், இருளால் முன்பதிவு பயணிகள், ஒதுக்கப்பட்ட பெட்டியை தேடி அலைகின்றனர். அதற்குள் ரயில் புறப்படுவதால், ஏதாவது ஒரு பெட்டியில் ஏறும் நிலை உள்ளது.
பிளாட்பாரத்திற்கும் ஜெனரேட்டர் மூலம் மின் சப்ளை வழங்க,மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201213:34:46 IST Report Abuse
Pugazh V எங்கள் கோவையிலும் கே கே எக்ஸ்ப்ரஸ் வரும்போதும், சேரன் கிளம்பும்போதும் போன வாரங்களில், சில நாட்களில் இது போல ஆனது. இப்போ எப்படி என்று தெரியவில்லை. எல்லோரும் கடந்த ஆட்சி, மத்திய அரசு போனவற்றை திட்டிவிட்டு போய்கிட்டே இருக்காங்க, பழகிவிட்டது சார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை