விருதுநகர்:"தினமலர்' செய்தியை தொடர்ந்து, ரேஷன் கடைகளில் கேபிள் "டிவி' விண்ணப்பத்தில், ஆப்பரேட்டர்கள் தவறான தகவல் அளித்தால், போலீஸ் மூலம்
நடவடிக்கை, உரிமம் ரத்து செய்யப்படும்,''என, கலெக்டர் ஹரிஹரன் எச்சரித்துள்ளார். கேபிள் "டிவி' இணைப்பு எண்ணிக்கை அறிய, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை ரேஷன் கடைகளில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். சில கேபிள் "டிவி' ஆப்ரேட்டர்கள், விண்ணப்பங்களை பெற்று தங்களுக்கு சாதகமாக, பூர்த்தி செய்து கொடுப்ப தாக, "தினமலர்' இதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, கலெக்டர் ஹரிஹரன்,""கேபிள் "டிவி' ஆப்பரேட்டர்கள், கணக்கெடுப்பு விண்ணப்பத்தினை தங்களுக்கு சாதகமாக பூர்த்தி செய்வது தெரிய வந்தால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். கேபிள்"டிவி'உரிமம் ரத்து செய்யப்படும்,''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.