புதுடில்லி:எல்லையில் சீன ராணுவத்தின்நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன,'' என,ராணுவ அமைச்சர், அந்தோணிகூறினார். லோக்சபாவில், அவர்கூறியதாவது: நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான, எல்லைப் பாதுகாப்பில் மிகுந்த கவனமாக உள்ளோம். சீனாவுடனான எல்லையில், அந்நாட்டின்ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பை உறுதி செய்வதற்கானஅனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளோம். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த, ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும், ராணுவத்திற்கு மட்டுமான, விசேஷ ரயில்வே பாதை அமைப்பது குறித்துதிட்டம் வரையப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம்உதவியுடன், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் அந்தோணி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.