புதுடில்லி : கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 191 போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுன்டரில் சொராபுதீன் , துளசிராம் பிரஜபதி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலி என்கவுன்டர்கள் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் கழகம் தாக்கல் செய்துள்ளது.
அதிர்ச்சி அளித்த அறிக்கை:
அரசுக்கு எதிரான புகார்கள்
சுப்ரீம் கோர்ட் தகவல் :
வழக்கு விபரங்கள் :
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் , பாதிக்கப்பட்ட பின் நீதி வழங்குவது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது .ஆனால் உடனடி தண்டனைகளால் மேலும் பாத்கிப்புகள் தொடர்வது தடுக்கப்படும் . மற்ற சூழ்நிலைகளைவிட , கொடூரமான முறையில் நடந்தொகொள்ளும் போக்கிரிகள் விசயத்தில் நீதி உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் .ஏனெனில் இதில் சமூகத்தின் ஒவ்வொரு துணுக்கும் பாதிக்கப்படுகிறது.
ஒரு குற்றவாளி சுதந்திரமான முறையில் நடமாடுகிறான் என்றால் அவனால் ஒரு குற்றமற்ற மனிதன் அச்சத்தில் உறைந்துகொண்டிருக்கிறான் என்றே பொருள். ஒவ்வொரு மனிதனுக்கும் அமைதியான சூழலில்" வாழும் உரிமை" உண்டு. அடிப்படை உரிமையான வாழும் உரிமையைப் பறிப்பவன் வாழத் தகுதியற்றவன். &39 encounter &39 என்று சொல்லப்படும்" தற்காப்பு " அல்லது " உயிர்காப்பு கொலையின் " வரையறை இதுவே.
நம் நாடு வல்லரசாகும் முன்னேற்றப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. ஆயினும் மிஞ்சிய மக்கட்தொகை , இயற்கை வளங்களையே முழுமையாக நம்பியிருத்தல் போன்ற காரணங்களால் இன்றும் பற்றாக்குறையே நிலவிவருகிறது. இதில் சட்டம் மற்றும் சிறைத் துறைக்கு செலவிடப்படும் கணிசமான தொகையை மிச்சப்படுத்தவேணும் உயிர்காப்புக்கொலைகள் நிகழ்வதை வரவேற்கவே வேண்டும்
நம் நாட்டில் நிகழ்த்தப்படும் அரசியல் மற்றும் போக்கிரிக் கும்பல்களின் பழிதீர்ப்பு தொடர்பான கொலைகள் சிறைகளுக்குள்ளேயே திட்டமிடப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும் போக்கிரிகளின் பாதுகாப்பான பதுங்குமிடமாக சிறைகள் உள்ளன என்பதும் நம்பத்தகுந்ததே.
குற்றம் சாட்டப்பட்டவன் தன தரப்பு நியாத்தை எடுத்துரைக்க உரிமை உண்டு என்பது நம் "அரசியலமைப்புச் சட்டம் " மற்றும் "இந்திய தண்டனைச் சட்டம் IPC " அளித்துள்ள அடிப்படை உரிமையாகும் . எக்காரணம் கொண்டும் குற்றமற்றவன் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக வழங்கப்பட்ட இவ்வுரிமையை " சட்டத்தின் ஓட்டைகள் " என்று இழிபெயரிட்டு அதன்மூலம் தப்பநினைக்கும் விசமிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கும் விதமாக " உயிர்காப்புக் கொலை" ( encounter ) சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்.
கோயம்புத்தூரில் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுவன்,சிறுமி முஸ்கன் வழக்கு மற்றும் மதுரையில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வெள்ளைத்துரை அவர்களால் நிகழ்த்தப்பட்ட உயிர்காப்புக் கொலை போன்றவை இதை உணர்த்துகின்றன.
எந்தவொரு நிகழ்வையும் புரிந்துகொள்ள பல்நோக்கு அல்லது பலபக்கப் பார்வை அவசியமாகின்றது. ஒருபக்கம் நியாமனதாகத் தோன்றும் உயிர்காப்புக் கொலைகளின் மறுபக்கம் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. உண்மைகள் வெளிப்பட்டுவிடாமல் தடுக்கவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் நிகழ்த்தப்படும் உயிர்காப்புக்கொலைகள் போக்கிரிகள் நிகழ்த்தும் கொலைகளை விடக் கொடூரமானவை. இவற்றின் மூலம் பலகுற்றவாளிகள் தப்பித்து மீண்டும் சுதந்திரமாக தன சமூகவிரோத செயல்களைத் தொடர்கின்றனர் , அல்லது குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் மும்பையில்(2000-2004) மட்டும் 440 பேர் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்டஉயிர்காபுக்கொலைகளில் கொல்லப்பட்டுள்ளனர் . இதன்மூலம் எழுந்த மனித உரிமை ஆர்வலர்களின் குரல்கள் நம்மைச் சிந்திக்கவைக்கின்றன.
மனித உரிமையைப் பற்றிப் பேசும் இடத்தில் குரிப்பிட்டகவேண்டிய பெயர் ஐரோம் சர்மிளா . இவர் கடந்த 2002 ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உண்ணாநோன்பைக் கடைப்பிடித்து வருகிறார். இந்தியாவின் எல்லைப்புற மாநிலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்க அமல்படுத்தப்பட்ட Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA) ன் மூலம் மணிப்பூரில் உயிர்காப்புக் கொலை நிகழ்த்தப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் 62 வயது மூதாட்டி, மற்றும் 18 வயது சாதனையாளரான ஒரு பெண் மற்றும் சில குழந்தைகளும் அடங்குவர்.இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சர்மிளா , தவறான நோக்கில் காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் உயிர்காப்புக் கொலைகளைத் தடுத்துநிறுத்தும்படி அரசினை வேண்டி உண்ணாநோன்பிருந்து வருகிறார் .
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழும் உரிமை உண்டு. அதற்கு இடையூறு விளைவிக்கும்,சமூக அமைதியைக் குலைக்கும் சமூக விரோதிகள் தண்டிக்கப்படவேண்டும். உடனுக்குடன் கிடைக்கும் தண்டனைகள் தவறு செய்பவர்களை அச்சுறுத்தி தவறான வழியிலிருந்து நீக்கும் . சமூக அமைதிக்கு உத்தரவாதமளிக்க நீதித்துறை விரைவாக்கப்பட வேண்டும். அதுவரை சமூக அமைதிக்கு காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் உயிர்காப்புக்கொலைகள் ஒன்றே வழி ஏனெனில் தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியாகும்.அது அநீதிக்கு சமம். தர்மத்தின் கையாய் செயல்படும் காவல்துறை ஆய்வாளர் திரு.வெள்ளைத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
வாழ்த்துக்களுடன் ,
ஜெரா
உத்தமர்களை, தியாகிகளை என்கவுன்டரில் கொன்றால்தான் தவறு. தீவிரவாதிகளைக் கொன்றால் தவறில்லை மோதியின் அரசு கொன்றது உத்தமனையோ, தியாகியையோ அல்ல மக்கள் வரிப்பணத்தில் சோறு, கரி எல்லாம் கொடுத்துப் பராமரிக்க வேண்டும் என்கிறதா, மனித உரிமைக் கழகம்? தீவிரவாதிகளால் பாதிக்கப் படும் மக்களுக்கு மனித உரிமை இல்லையா? தீவிரவாதிகளுக்குப் பரிந்து பேசும் மனித உரிமைக் கழகம் அவர்களால் பாதிக்கப் படும் மக்களைக் காக்க அரசுகள் என்ன செய்கின்றன என்று கேட்குமா?
குஜராத்திற்கு இரண்டாவது இடம் என்பது மனித உரிமைக் கழகம் தரும் தவறான தகவல். மற்ற அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடும்போது அங்கே மிகக் குறைவு குஜராத்தில் தேர்தல் நடைபெறும் இந்நேரத்தில் மனித உரிமைக் கழகம் காங்கிரசை மகிழ்விக்க இத்தகவலை வெளியிட்டிருக்கலாம் தவிர குஜராத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர்களில் கூட தீவிரவாதிகளே தப்பிக்க முயலும்போது சுடப்பட்டுள்ளனர் இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை சிறுபான்மை வாக்குகளைக் குறிவைத்து, தேச நலன் பற்றிக் கவலைப்படாமல் இந்தியாவைத் தீவிரவாதிகளின் கையில் ஒப்படைக்க காங்கிரஸ் விரும்பலாம் மோதியின் அரசும் அவ்வாறு விரும்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே? இங்கு குறிப்பாகக் குஜராத் அரசைக் குறை கூறி எழுதியுள்ள அன்பர்களின் பெயர்களைப் படித்தாலே தெரியும் எப்போது மத வேறுபாடு இன்றித் தீவிரவாதத்தை எதிர்க்கிறோமோ, அப்போதுதான் இந்தியாவில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவும் இந்தியாவில் தீவிரவாதிகள் துணையில்லாமல் பாகிஸ்தான் வாலாட்ட முடியாது இங்கேயே துரோகிகள் உள்ளனர்
மனித உரிமை என்பது சுத்த ஹம்பக். வருடம் சுமார் இருவது ஆயிரம் பெண்கள் வன் புணர்ச்சி கொடூர கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் இவர்களுக்கு மனித உரிமை என்ன சொல்ல போகிறது. வெளி நாட்டில் வேலை செய்யும் ஆணோ பெண்ணோ பாதுகாப்பும் இல்லை மனித உரிமைகளும் இல்லை. மும்பையில் தீவர வாதிகளால் சுட்டு கொல்லப்பட்டவர்களுக்கு என்ன பதில் கோத்ரா ரயிலில் எரித்து கொன்றார்களே அதற்கு என்ன பதில் மூன்று லட்சம் தமிழர் கொல்லப்பட்டபோது சிறிலங்காவிற்கு ஆயுதம் கொடுத்த காங்கிரசின் எஜன்ட் மனித உரிமை கழகம் மனித உரிமை பற்றி பேசுவது ரசிக்க முடியவில்லை.
நாளை உண்மையை வெளிக்கொணரும் நிருபர்கள் கூட சுடப்படலாம்.......ஆகவே போலி நாடகத்திற்கு பத்திரிக்கைகள் துணைபோக கூடாது. ரௌடிகள் கடுமையாக தண்டிக்கபடவேண்டியவர்கள் தான் ஆனால் சுட்டு தள்ள பட வேண்டியவர்கள் அல்ல ......நீதி மன்றம் மூலம் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டியவர்கள். இறந்து போன ரௌடிகளின் தாய், மனைவி மற்றும் குழந்தைக்கு யார் பொறுப்பு?? . சட்டத்தினால் தண்டனை வாங்கித்தர போலீசினால் முடியவில்லையா??

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.