சென்னை: உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 37 கோடி செலவில் 11 இடங்களில் மீன்விதைப் பண்ணைகள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள உள்நாட்டு நீர்வளங்களை முழுமையாக பயன்படுத்தி மீன்பிடிப்பை அதிகப்படுத்துவதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய மீன் விதைப் பண்ணைகளை ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், கரூர் மாவட்டத்தில் திருக்கம்புலியூர், திருச்சி மாவட்டத்தில் அசூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் தட்டமனைப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அகரப்பேட்டை, நெய்தலூர், தட்டான்குளம், விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர் அணை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாணியஞ்சாவடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு, கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை ஆகிய 11 இடங்களில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.